சிறுகதை

வந்தது போல் | கோவிந்தராம்

அன்று அன்புநாதன் உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க வரச் சொன்னார்.

அனைவரும் வந்து வரவேற்பறையில் காத்து இருந்தனர்.

அவர் மாடியில் தான் அமர்ந்த இருந்தார்.

பணியாளரை அழைத்து மருத்துவரும் வழக்கறிஞரும் வந்து விட்டார்களா என்று பார்த்து வரச் சொன்னார்.

பணியாளரும் கீழே சென்று பார்த்தார். இவருவரும் வாசலிலிருந்து இறங்கி வருவதைக்கண்டதும் மாடிக்குச் சென்று எஜமானரிடம் அய்யா இருவரும் வந்து விட்டார்கள் என்று சொன்னார்.

அன்பு நாதன் கீழே இறங்கி வந்தார்.

அவர் வந்ததும் அங்கு அமர்ந்து இருந்தவர்கள் அனைவரும் எழுந்து அவருக்கு வணக்கம் செலுத்தினார்கள்.

அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு அவரும் அமர்ந்தார். மருத்துவரையும் அருகே அழைத்தார்.

நான் நேற்று உங்களுடன் ஆலோசனை செய்த மாதிரி பத்திரங்களை தயார் செய்து வந்தீர்களா என்றார்.

வழக்கறிஞர் ஆம் நீங்கள் சொன்னபடியே தயார் செய்து வந்திருக்கிறேன் என்றார். உடனே மருத்துவரை அழைத்து உடலைப் பரிசோதனை செய்யச் சொன்னார். அவரும் சோதனை முழுவதையும் செய்து விட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது என்றார்.

அன்பு நாதன் பேச ஆரம்பித்தார். அனைவருக்கும் காலை வணக்கம். நான் இங்கு உங்களை எல்லாம் எதற்காக வரச் சொன்னேன் என்று தெரியுமா என்றார். வந்தவர்கள் அவரையே விழித்துப் பார்த்தனர். அவர் புன்சிரிப்புடன் எனக்கு வயதாகிவிட்டது. நல்ல மனநிலையில் இருக்கும் போது சிலமுடியவுகளை எடுக்க வேண்டும் என்று தான் மருத்துவரையும் வழக்கறிஞரையும் வரச் சொன்னேன். நான் சொன்ன படி அவர்களும் சிலகாரியங்களைத் தான் முடிவு செய்து பத்திரங்களைப் பதிவு செய்ய வந்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லப் போவதை நான் ஏற்கனவே முடிவு செய்தது அதை அனைத்தையும் நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்புகிறேன் என்றார்.

வலது பக்கம் அமர்ந்திருந்த உறவினர்கள் சகோதரர்களும் பிள்ளைகளும் யோசனை செய்ய ஆரம்பித்தார்கள். அனைவருக்கும் ஏற்கனவே அவரவர்கள் வசிப்பதற்குபோதுமான அளவில் வீடும் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தையும் சேமிப்பில் கொடுத்து வைந்திருந்தார். ஆனாலும் உறவினர்கள் ஒவவொருவரும் மேற்கொண்டு நமக்கு என்ன சொத்துக்களைப் பிரித்துத் தருவார் என்று மனதில் கோட்டை கட்ட ஆரம்பித்தார்கள்.

மூத்த சகோதரர் தற்போது கூடுதல் வருவாயுடன் செயல்பட்டு வரும் தொழிற்சாலையை தன் பேருக்கு எழுதிவைத்தால் இன்னும் மகிழ்ச்சியாகவும் வசதியாக வாழலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அடுத்து அமர்ந்திருந்த இளைய சகோதரர் தனக்கு எல்லா விவசாய நிலங்களையும் தன் பேருக்கு எழுதி வைத்தால் மேற்கொண்டு சுதந்திரமாக விவசாயம் செய்து பெரும் பணத்தை ஈட்டி பக்கத்தில் உள்ள விளை நிலங்களையும் வாங்கி பெருமையாக வாழலாம் என்று நினைத்தார்.

ஒரே ஒரு சகோதரி தன் அண்ணன் அவர் வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைத்திருக்கும் நகைகள் தனக்கு மட்டும் கொடுத்தால் போதுமென்ற மனதில் கோட்டை கட்டினார்.

இடது பக்கம் அமர்ந்து இருந்த நண்பர்கள் ஒவ்வொருவராக எழுந்து அவர்கள் மனதில் தோன்றிய சில காரியத்தை கேட்க ஆரம்பித்தார்கள். பள்ளித் தோழர் ஒருவர் கல்வி அறக்கட்டளைக்கு எவ்வளவு சேமிப்புத் தொகை அளிக்க இருக்கிறாய் என்றார்.

மெல்லிய புன் சிரிப்பை உதிர்த்தார்.

வியாபாரத்தோழர் ஒருவர் தொழிற்சாலை பணியாளர் நல்வாழ்விற்காக எவ்வளவு தொகை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

அதற்கும் அதே புன்சிரிப்பை உதிர்த்தார்.

ஆன்மீக நண்பர் பொது மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவமனைக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

புன்சிரிப்பு மேலும் கூடியது.

ஏற்கனவே கோட்டை கட்டியிருந்த உறவினர்கள் நண்பர்களை எரித்து விடுவது போல் பார்த்தனர். நண்பர்கள் உறவினர்களைப் பார்த்து ஏற்கனவே போதுவான சொத்துக்களைக் கொடுத்த பின்னரும் இன்னும் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்று யோசனை செய்ய ஆரம்பித்தார்கள்.

அன்பு நாதன் வழக்கறிஞரிடம் எழுதிக் கொண்டு வந்த பத்திர விவரங்களை வாசிக்கச் சொன்னார் . அவர் உறவினர்களுக்கு ஏற்கனவே போதுமானவைகள் திருப்தியாக கொடுத்து விட்டதால் மற்றுமுள்ள சொத்துக்களை கல்விக்கும் தொழிலாளர் நலனுக்கும் பொதுமக்கள் மருத்துவமனைக்கும் எழுதி வைத்துள்ளார் என்று வாசித்துக் காட்டினார்.

இறுதியாக அன்பு நாதன் பேச ஆரம்பித்தார் என் உழைப்பாலும் இறைவனின் அருளாலும் நன்றாக வாழ்ந்து அனைவருக்கும் செய்ய வேண்டியதை முழுமையாக செய்தேன். இந்த முடிவுகளை மனப்பூர்வமாக எடுத்தேன் என்றார்.

நான் எப்படி தனியாக வந்தேனோ அது போல் இறுதியில் தனியாகவே செல்ல விரும்புகிறேன் என்றார்.

எல்லோரும் கண்கலங்கினர்.

இப்போதும் மெல்லிய புன் சிரிப்பை உதிர்த்தார் அன்பு நாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *