செய்திகள்

வத்தலக்குண்டு பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

Spread the love

வத்தலக்குண்டு, மார்ச்.29–

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொரானா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. குறிப்பாக வத்தலக்குண்டு பேரூராட்சிகளில் உள்ள 18வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இது சம்பந்தமாக பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில், சுகாதார அலுவலர் செல்வி, பாஸ்கரன், ராமச்சந்திரன், ரவி, ஆகியோர் 18வார்டுகளிலும் உள்ள கழிவுநீர் சாக்கடைகள் சுத்தம் செய்தல் சோப்பு கலந்த கிருமிநாசினி தெளிப்பது, பிளிச்சிங்பவுடர் துவுவது, மேல்நிலை தொட்டிகள், தரைதொட்டிகள் சுத்தம் செய்தல், குடிநீர் வழங்குவது முறைபடுத்துவது போன்ற அடிப்படை பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். கொரானா வைரஸ் நிலமை பாதிப்பு தன்மை பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகள், விளம்பர தட்டிகள் மற்றும் ஆட்டோ மூலம், ஆடியோ விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இதுபோல் கிராம ஊராட்சி பகுதிகளில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெயசந்திரன், கிராம ஊராட்சி ஆணையாளர் வேதா ஆகியோரின் ஆணைபடி வத்தலக்குண்டு தீயணைப்புதுறையின் மூலம் 17 கிராம ஊராட்சிகளிலும் சாலைகளில் மக்கள் கூடும் இடங்களில் கொரானா வைரஸ் தொற்றுநோய் பரவுவரை தடுக்கும் விதமாக வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் தீயணைப்பு வீரர்களுடன் சென்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *