செய்திகள்

வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கபசுரகுடிநீர் விநியோகம்

வத்தலக்குண்டு, ஜூன்.8–

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா பேருந்து நிலையத்தில் பசுமை வதிலை இயக்கத்தின் சார்பாக வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் கபசுர குடிநீர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தலைமை ஏற்று அரசு சித்த மருத்துவர் வசந்த் மில்டன் ராஜ் , பசுமை வதிலை இயக்கத்தலைவர் மருத ராஜன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பண்ணை கோமகன முன்னிலையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் துணைத் தலைவர் தங்கராஜ் துணைச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் பொருளாளர் ராஜா ராஜாமுகமது 108 பாலு தங்கப்பாண்டி அனைவரும் கலந்து கொண்டார்கள். முடிவில் செயலாளர் மூ. செல்வபாண்டியன் நன்றி கூறினார். பேருந்து நிலையத்திற்குள் வரும் பயணிகளை முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கும் பயணிகளுக்கும் கபசுர குடிநீர் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *