செய்திகள்

வத்தராயிருப்பில் சார் கருவூலம் அமைக்கப்படும்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Spread the love

சென்னை, மார்ச் 20–

வத்தராயிருப்பில் சார் கருவூலம் இந்த ஆண்டே அமைத்து தரப்படும் என்று சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி உறுப்பினர் சந்தி்ர பிரபா கேள்வி ஒன்றை எழுப்பினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்குட்பட்ட வத்தராயிருப்பில் சார் கருவூலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேட்டார்.

அதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கும்போது, தமிழகத்தில் அனைத்து வட்ட தலைமையகத்திலும் சார் கருவூலம் அமைக்க வேண்டும் என்பது ஜெயலலிதா அரசின் கொள்கை ஆகும்.

59 சார் கருவூலங்கள் அமைக்க முன்மொழிவு பெறப்பட்டுள்ளது.

உறுப்பினர் கோரிய வத்தராயிருப்பில் சார் கருவூலம் அமைக்கும் திட்டம் பரிசீலினையில் உள்ளது. இந்த ஆண்டு உறுப்பினரின் கோரிக்கைப்படி வத்தராயிருப்பில் சார் கருவூலம் அமைத்து தரப்படும் என்றார்.

அதேபோல் அரக்கோணம் தொகுதி உறுப்பினர் ரவி கேள்வி ஒன்றை எழுப்பினார். அரக்கோணம் தொகுதி பல்லூர் கிராமத்தில் நவீன அரிசி ஆலை அமைக்க அரசு முன்வருமா? என்றார்.

அதற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதில் அளிக்கையில், தகுதியான இடங்களில் நவீன அரிசி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உறுப்பினர் கோரிய பகுதியிலும் நவீன அரிசி ஆலை அமைத்து தரப்படும்.

தமிழகத்தில் தற்போது 5 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல்லை அரவை செய்யும் வசதி உள்ளது. உறுப்பினர் கோரிய கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

அதேபோல் கொள்முதல் செய்யும் நெல்களை சேமிக்க கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மட்டும் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *