செய்திகள்

வடமாநிலங்களில் கொளுத்தும் வெயில்; 122 டிகிரி பதிவு: விலங்குகளும், பறவைகளும் செத்து மடிக்கின்றன

ராஞ்சி, ஜூன்.4-–

வடமாநிலங்களில் கொளுத்தி வரும் கடும் வெயில் காரணமாக விலங்குகளும், பறவைகளும் உயிரிழந்து வருகின்றன.

வடமாநிலங்களில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது.

ராஜஸ்தான் தொடங்கி மேற்கு வங்கம் வரை வெயில் தீவிரமாக இருந்தது. பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியிருந்தது.

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள், ஒடிசா, ஜார்க்கண்டின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. பல்வேறு இடங்களில் 122 டிகிரி பதிவாகி உள்ளது. இந்த வெப்பம் காரணமாக நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதே நேரம் இந்த வெயில் விலங்குகளையும் வாட்டி வதைக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் ஒரு பாசன கிணற்றில் 32 குரங்குகள் செத்து மிதந்தன. இதுகுறித்து மேதினிநகர் கோட்ட வன அதிகாரி குமார் ஆஷிஷ் கூறுகையில், சோரக் கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதி யில் வெயில் காரணமாக நீராதாரங்கள் வற்றிவிட்டன.

எனவே தண்ணீைர தேடி வந்த இந்த குரங்குகள், சோரக் கிராமத்தில் உள்ள ஒரு பாசனக் கிணற்றுக்கு வந்து, தாகத்தைத் தணிக்க முயற்சிக்கும் போது நீரில் மூழ்கி இறந்துவிட்டன என்றார்.

சில நாட்களுக்கு முன், செயின்பூர் வனப்பகுதியில் தண்ணீர் தேடி அலைந்த 3 குள்ளநரிகள் கிணற்றில் விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டம் பாலி வனப்பகுதி யில் உள்ள பர்சடா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் 24 வவ்வால்கள் செத்து மிதந்தன. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறை யினர் அவற்றை மீட்டனர். பின்னர் அவற்றின் உடல்களை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், ‘வெப்பத் தாக்குதலால் அந்த வவ்வால்கள் இறந்திருக்கலாம்.

இதனிடையே ஒடிசா மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 99 பேர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#வெப்ப அலை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *