செய்திகள்

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் 4 பணிகள்:அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்

Makkal Kural Official

சென்னை, பிப்.4–

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மாதவரம் சட்டமன்ற தொகுதி, விளாங்காடுபாக்கத்தில் புதிய சமுதாய நலக்கூடம், கொளத்தூரில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், முதல்வர் படைப்பகம் எனப்படும் “மக்கள் சேவை மையம், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, எம்.கே.பி. நகரில் புதிய சமுதாய நலக்கூடம் மற்றும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி, தண்டையார்பேட்டையில் புதிய ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் என 4 பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மாதவரம் சட்டமன்ற தொகுதி, புழல் ஒன்றியம், விளாங்காடுபாக்கத்தில் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய சமுதாய நலக்கூடத்தின் பணிகளையும்,

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, பேப்பர் மில்ஸ் சாலையில் ரூ.49.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், முதல்வர் படைப்பகம் எனப்படும் “மக்கள் சேவை மையத்தின் பணிகளையும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, எம்.கே.பி. நகர், சென்ட்ரல் அவென்யூ சாலையில் ரூ.19.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய சமுதாய நலக்கூடத்தின் பணிகளையும்

மற்றும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி, தண்டையார்பேட்டையில் ரூ.24.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு மையத்தின் பணிகளையும் என 4 பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்.

மேயர் பிரியா

இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், ஜே.ஜே. எபினேசர், நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார்,

மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மண்டலக் குழுத்தலைவர்கள் சரிதா மகேஷ்குமார், நேதாஜி கணேசன், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் எஸ்.ருத்ரமூர்த்தி, ந.ரவிக்குமார், அ.பாலசுப்ரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், கண்காணிப்புப் பொறியாளர் ராஜமகேஷ்குமார்,

மாநகராட்சி மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன், சரவணமூர்த்தி, செயற்பொறியாளர்கள் ராஜன்பாபு, உள்ளாட்சி பிரதிநிதிகள் புழல் எம்.நாராயணன், சரவணன், ஐ.சி.எப்.முரளி, கே.சந்துரு, மகேஷ்குமார், விளாங்காடுபாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பாரதி சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் டில்லிபாபு, யோகபிரியா தனசேகர், நாகராஜன், தாவுத்பீ, ஸ்ரீதணி, சாரதா, உள்ளாட்சி பிரதிநிதி புழல் எம். நாராயணன், மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *