செய்திகள்

வடசென்னை ஐயப்பன் கோவிலில் சபரி மலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்தனர்

சென்னை, நவ.17

வடசென்னை, புதுவண்ணார பேட்டை தண்டையார்பேட்டை டோல்கேட் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலில், சபரிமலைக்குச் செல்ல இருக்கும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

கொரோனா நோய் பெருந்தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ஐயப்ப பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு பொறுமையாக காத்திருந்து மாலை அணிந்து கொண்டனர்.

சபரிமலைக்கு செல்வோருக்கு நாளொன்றுக்கு 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாலும், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகவும் பக்தர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட குறைந்தே காணப்பட்டது. இருந்தபோதிலும் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து சபரிமலைக்குச் செல்வோர் ஆர்வத்துடன் குருசாமிகளிடம் மாலை அணிந்து கொண்டனர்.

காலையில் ஐயப்பனுக்கு உஷ பூஜை, உச்ச பூஜை, பகலில் நெய்யபிஷேகம், இரவில் மலர் பூஜை, அத்தாழ பூஜை, ஹரிவராசனம் ஆகியவை நடைபெற்றன. மேலும், விநாயகருக்கு கணபதி ஹோமமும், குருவாயூரப்பனாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கு பாலபிஷேகமும் நடைபெற்றன.

வடசென்னை பக்தர்களுக்கு என உருவாக்கப்பட்ட முதல் ஒரே ஐயப்பன் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *