சென்னை, ஜன. 2–
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் பெய்யும் வழக்கமான 440.30 மி.மீ. மழையை காட்டிலும் இம்முறை ஒரு சதவீதம் அதிகமான மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாக கணக்கிடப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்த காலக்கட்டத்தில் வழக்கமாக 440.30 மி.மீ. மழை பதிவாவது வழக்கம். இந்த முறை வழக்கத்தைவிட ஒரு சதவீதம் அதிகம் மழை கிடைத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் 21 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.