செய்திகள்

‘‘வங்கிகளில் பெரும் தொகையை கடனாக வங்கி செலுத்தாவர்கள் பெயர் பட்டியல் வெளியீடு’’

புதுடெல்லி, மே 28–

வங்கிகளில் பெரும் தொகையை கடனாகப் பெற்று திரும்ப செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு ரிசர்வ் வங்கியை மத்திய தகவல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

லக்னோவைச் சேர்ந்த நூதன் தாகுர் என்ற சமூக ஆர்வலர் தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) தாக்கல் செய்த மனுவில் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா 2017-ம் ஆண்டு நிகழ்த்திய உரையில், அதிக கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் அவ்விதம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடன்தாரர்கள் விவரத்தை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

வங்கிகளின் மொத்த வாராக் கடனில் (என்பிஏ) 25 சதவீதத்துக்கும் மேலான கடன் தொகை பெற் றுள்ள நிறுவனங்களில் 12 நிறுவனங்களின் பட்டியலை அனுப்புமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விதம் கடன் பெற்ற நிறுவனங்கள், தனி நபர்களின் கடனை மீட்பதற்கான மாற்று திட்டங்கள் (சீரமைப்பு) அளிக்குமாறு, குறித்த காலத்துக்குள் அவை செயல்படுத்த முடியாவிட்டால் அவற்றை திவால் நடைமுறை சட்டத்துக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக வீரல் ஆச்சார்யா குறிப் பிட்டிருந்தார். அதை சுட்டிக் காட்டி வங்கிகளுக்கு அனுப்பிய கடனை பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளோர் பெயர் விவரத்தை வெளியிடுமாறு தாகுர் கேட்டுள்ளார்.

ஆனால் இது மிகவும் ரகசியமானது, இந்த விவரத்தை வெளியிட முடியாது என ஆர்பிஐ தெரிவித்துவிட்டது.

மேல்முறையீடு

ரிசர்வ் வங்கியில் உள்ள தலைமை தகவல அதிகாரி, ஆர்டிஐ மனுவுக்கு பதில் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டு தாகுரின் மனுவை நிராகரித்துவிட்டார்.

இதுகுறித்து மத்திய தகவல் ஆணையர் சுபாஷ் சந்திராவிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த அவர், கடனை பெற்று திரும்ப செலுத்தாத வர்கள் விவரத்தை வெளியிட்டால் வங்கியில் முதலீடு செய்துள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற ஆர்பிஐ கூற்றை ஏற்றுக் கொண்டாலும், இதில் மறு சீரமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளவர்களின் பெயர் விவரங்களை வெளியிடுவதில் எந்த தவறும் இல்லை. எனவே ஆவணங்களை முழுமையாக தராவிட்டாலும், பெயரை வெளியிடலாம் என்று ரிசர்வ் வங்கிக்கு சிஐசி உத்தர விட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *