டாக்கா, டிச. 21–
வங்கதேசத்தில் 3 இந்து கோவில்களில் சிலைகளை சேதப்படுத்திய 27 வயதான வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவிற்கு வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. ஷேக் ஹசீனா தப்பி ஓடியதை அடுத்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. மேலும், இந்து கோவில்களும் தாக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், மீண்டும், கடந்த 2 நாட்களில் 3 இந்து கோவில்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் உள்ள 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. பீல்தோரா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. ஷாகுவாய் பகுதியில் உள்ள ஒரு ஒரு கோவிலில் 2 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் பொலஷ்கந்தா கிராமத்தில் வசித்து வந்த 27 வயதான வாலிபர் அலல் உதின் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையின் போது, உதின் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிலைகளை சேதப்படுத்திய நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’ என கோவில் கமிட்டி தலைவர் உள்ளார்.