செய்திகள்

வங்கதேசத்தில் இஸ்கான் பூசாரி கைது: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்

Makkal Kural Official

டாக்கா, நவ. 29–

இந்து பூசாரி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 3 மாதங்கள் முன்பு வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்த தொடங்கினர். இடஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.

ஷேக் ஹசீனா கண்டனம்

மேலும் ஷேக் ஹசீனாவின் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டனர். அப்போது வன்முறையின் தீவிரத்தை அறிந்த ஷேக் ஹசீனா, ராணுவ உதவியுடன் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கு வங்க தேச அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே வங்க தேசத்தை சேர்ந்த பூசாரி சின்மோய் கிருஷ்ண தாஸ் என்பவர் திடீரென கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இஸ்கான் கோவில் தலைமை பூசாரியான சின்மோய் கிருஷ்ண தாஸை டாக்கா போலீசார் கைது செய்ததற்கு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்களை வங்க சேத அரசு செய்வது கண்டிக்கத்தக்கது எனவும் கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *