செய்திகள்

வங்கதேசத்திற்கு இந்தியா 12 லட்சம் இலவச தடுப்பூசி

டாக்கா, மார்ச் 28–

இந்தியா வங்கதேசத்திற்கு 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவத்தொடங்கியது முதல், பிரதமர் மோடி வெளிநாட்டு சூற்றுப்பயணங்களை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்கதேசத்திற்கு சென்றிருக்கிறார். மேலும் அந்நாட்டின் 50 வது சுதந்திரதின விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.

நேற்றைய தினத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர், இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்தும் வகையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

12 லட்சம் தடுப்பூசி

அத்துடன் வங்கதேசத்திற்கு இந்திய அரசு 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கியது. அதுதவிர, கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் சீரம் நிறுவனத்துடனான ஒப்பந்தப்படி, 3 கோடி கொரோனா தடுப்பூசிகள் அந்நிறுவனம் வங்கதேசத்திற்கு வழங்க வேண்டும். 16 கோடிக்கு அதிகமாக மக்கள் தொகையை கொண்ட வங்கதேசத்திற்கு 9 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தற்போது வரை சீரம் நிறுவனம் வழங்கி உள்ளது.

இதனிடையில் வங்கதேசத்தின் வெளியுரவுத்துறை அமைச்சர் எக அப்துல் மோமன் ‘சீரம் நிறுவனம் தொடர்ச்சியாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். வங்கதேசத்தில் இதுவரை 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *