புதுடெல்லி, ஏப்.18-
வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமிக்க தடை விதித்த நீதிபதிகள், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ப் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததால் அது சட்டமாகி உள்ளது.
இந்த சட்டத்துக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க. விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளும், பல முஸ்லிம் அமைப்புகளும் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்து உள்ளன.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய்குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரிக்க தொடங்கியது. அப்போது காரசார விவாதம் நடந்த நிலையில், வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா ஆஜராகி, ‘சட்டத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதுவும் வக்ப் திருத்த சட்டப்பிரிவுகளை மேலோட்டமாக படித்துவிட்டு இடைக்கால தடை விதிப்பது என்பது அசாதாரண நடவடிக்கை ஆகும். லட்சக்கணக்கில் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வக்ப் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமங்களும், தனியார் சொத்துகளும் வக்ப் சொத்துகளாக கருதி எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளால் அப்பாவி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்
வக்ப் திருத்த சட்டப்பிரிவுகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உரிய தரவுகள் இன்றி தடை விதிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நியாயத்தை தெரிவிக்கும் தரவுகளை அளிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்’ என வாதிட்டார்.
இதற்கு தலைமை நீதிபதி, ‘வக்ப் திருத்த சட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி உள்ளோம். அதே சமயம் சாதக அம்சங்களையும் தெரிவித்தோம். ஆனால் மனுதாரர்களின் உரிமைகளை கடுமையாக பாதிக்கும் தற்போதைய சூழல் தேவையில்லை என கருதுகிறோம். வக்ப்க்கு சொத்துகளை தானமாக அளிக்க 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற விதி புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. அதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை.
சட்டங்களுக்கு கோர்ட்டுகள் சாதாரணமாக தடை விதிப்பதில்லை என்ற வழக்கம் இருப்பதைப்போல, கோர்ட்டில் மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது மனுதாரர்களின் உரிமைகள் பாதிக்கப்படும் அளவுக்கு சூழல் மாறிவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொள்ளும் வழக்கம் உள்ளது’ என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரல், ‘மீண்டும் அவகாசம் தேவை’ என்று கோரினார்.
நியமனங்கள்
அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, ‘வக்பு வாரியங்களிலும், மத்திய வக்பு கவுன்சிலிலும் முஸ்லிம் அல்லாத புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்ற நிபந்தனையுடன் நீங்கள் கேட்கும் அவகாசம் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
உடனே சொலிசிட்டர் ஜெனரல், ‘நிபந்தனையை ஏற்பதாக மத்திய அரசின் சார்பில் மட்டுமே உறுதி அளிக்க முடியும். மாநிலங்கள் சார்பில் அளிக்க முடியாது. அப்படியென்றால், மாநில வக்பு வாரியங்களில் செய்யப்படும் நியமனங்கள் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடலாம்’ என்று தெரிவித்தார்.
இந்த வாதத்தை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவு வருமாறு:-
உறுப்பினர் நியமிக்க தடை
விசாரணையின்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா 7 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்வதாகவும், அடுத்த விசாரணை நடைபெறும் வரை, மாநில வக்பு வாரியங்களிலும், மத்திய வக்பு கவுன்சிலிலும் வக்பு திருத்த சட்டத்தின்படி புதிய நியமனங்கள் இருக்காது என்றும், மாநில வக்பு வாரியங்களில் நியமனங்கள் செய்யப்பட்டால் அவை செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடலாம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
மேலும் அடுத்த விசாரணை நடைபெறும் வரை வக்பு அனுபவ சொத்துகள் அல்லது கோர்ட்டுகளால் வக்பு சொத்துகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டவற்றையும், அரசிதழில் அறிக்கை வாயிலாக அறிவிக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட வக்பு சொத்துகளின் தன்மையை மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ மாட்டோம் என்ற உறுதியையும் சொலிசிட்டர் ஜெனரல் அளித்துள்ளார்.
இ்தை பதிவு செய்து கொள்கிறோம். வக்பு வாரியங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க தடை விதிக்கிறோம். தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். மத்திய அரசின் பதில் மனுவுக்கு மனுதாரர்கள் 5 நாட்களுக்குள் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும்.
5-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
ஹர்ஷத் மதானி, முகமது ஜமீன் மர்சன்ட், முகமது பஸ்லூர் ரஹீம், ஷேக் நூரூல் ஹாசன், அசாதுதீன் ஒவைசி ஆகிய 5 பேரின் ரிட் மனுக்கள் மட்டும் பிரதானமாக ஏற்றுக்கொள்ளப்படும். மற்றவர்களின் ரிட் மனுக்கள் இடையீட்டு மனுக்களாக கொள்ளப்படும்.
வக்பு சட்டத்தில் 2013-ம் ஆண்டு மேற்கொண்ட திருத்தத்துக்கு எதிராக ஹரிசங்கர், பாரூல்கேரா ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் விசாரணை பட்டியலில் தனியாக இடம்பெறும். இந்த ரிட் மனுக்களுக்கு ஏனைய ரிட் மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
வக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்த ரிட் மனுக்களுக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும், வக்பு வாரியங்களும் 7 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் அளிக்கும் பதில் மனுவுக்கு ரிட் மனுதாரர்கள் 5 நாட்களுக்குள் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகள் மீதான விசாரணையை அடுத்த மாதம் (மே) 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2025 All Rights Reserved. Powered by Summit
புதுடெல்லி: அடுத்த விசாரணை தேதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவரை உறுப்பினராக நியமிப்பதை இந்த உத்தரவு நிறுத்தி வைத்துள்ளது.
வக்பு (திருத்த) சட்டம் (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது என்றும், இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை நேற்று தொடங்கியது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவன், சி.யு.சிங் உள்ளிட்டோர் ஆஜராயினர். மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். நேற்றைய விசாரணையின்போது, 3 முக்கிய அம்சங்களை நீதிபதிகள் எழுப்பினர். வக்பு திருத்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.ADVERTISEMENT
இடைக்கால தடை விதிப்பதற்கு மத்திய அரசும் சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (ஏப்.17) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இன்று விசாரணை தொடங்கியதும், இந்த வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தினார். இந்த சட்டத்தின் சில விதிகளை நீதிமன்றம் நிறுத்தி வைத்தால் அது ஒரு “கடுமையான நடவடிக்கையாக” இருக்கும் என வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி சஞ்சய் குமார், “சட்டத்தின் சில விதிகள் நிறுத்தி வைக்கப்படாவிட்டால், களத்தில் நிலைமை மாறக் கூடும். பொதுவாக, ஒரு சட்டத்தை நிறுத்தி வைப்பது அரிது. ஆனால், நிலைமை கடுமையாக மாறக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறினார். அதற்கு, அடுத்த விசாரணை தேதி வரை வக்பு (திருத்தம்) சட்டம், 2025-இன் பிரிவு 9 மற்றும் 14-இன் கீழ் மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களுக்கு எந்த நியமனங்களும் செய்யப்படாது என சொலிசிட்டர் ஜெனரல் உத்தரவாதம் அளித்தார்.
அவரது உத்தரவாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், அதனை தனது இடைக்கால உத்தரவாக பதிவு செய்தது. மேலும், பயனர் சொத்துகளின் வக்பு சொத்துக்கள் அனைத்தும் அடுத்த விசாரணை தேதி வரை ரத்து செய்யப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை மே 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், அப்போது சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மைக்கு சவால் செய்யும் மனுக்களுக்கு மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளது.
![]()





