செய்திகள்

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 2000 பேர் பலி

Makkal Kural Official

பெய்ரூட், அக். 05–

லெபனான் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலில்,

பெண்கள், குழந்தைகள் உள்பட 2000 பேர் பலியாகி உள்ளதாக லெபனான் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இந்த தாக்குதலில் மட்டும் சுமார் 42,000 உயிரிழந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, எல்லைதாண்டிய இஸ்ரேல் ஈரானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு ஆதவராக மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு அமைப்புகளும் இஸ்ரேலை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

2000 பேர் பலி

இதற்கு இஸ்ரேலும் சற்றும் சலிக்காமல் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே போல இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதனால், போர் தீவிரமடைந்த நிலையில், போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.

இப்படி இருக்கையில், இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய மோசமான தாக்குதலில் 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் மிகப்பெரிய இஸ்ரேல் கடுமையாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை பேர் உயிரிழந்த நிலையிலும் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *