கதைகள் சிறுகதை

லூப் சாலை..! (சாலை 72) : ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அன்று மாலை கார்த்திக்கும், யுவராஜும் மெரினா கடற்கரைக்குச் சென்றார்கள். இருசக்கர வாகனத்தில் சென்றாலும் காலாற நடந்து போவது தான் உடம்பிற்கு நல்லதென்று கலங்கரை விளக்கம் சாலையில் நடந்து சென்ற போது அவர்களுக்கு வித்தியாசமான ஒரு சாலை கண்ணில் பட்டது .அந்த சாலையின் பெயர் லூப் சாலை.

” என்ன இது லூப் சாலை ? லூப் என்றால் என்ன? என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டே சென்றார்கள். இந்த லூப் சாலை மீனவ மக்களின் பாரம்பரியப் பாதையாக இருந்து, அதன் பிறகு நகர்புறப் போக்குவரத்தைக் குறைப்பதற்காகப் போடப்பட்ட சாலையே லூப் சாலை” என்று இருவரும் பேசிக் கொண்டார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது இன்றைய லூப் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் புறம்போக்கு அல்லது மீன்பிடி நிலம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது .இது அரசாங்கத்திற்கு சொந்தமானது ஆனால் பாரம்பரியமான சமூக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டதாக இந்த நிலம் குறிக்கிறது. மீனவர்கள் அந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்வது என பல உரிமைகள் அனுபவித்தனர். சுதந்திரத்திற்கு பிறகு குறிப்பாக 1970களில் சென்னை நகரம் வேகமாக விரிவடைந்தது.

காமராஜர் சாலை கடற்கரை சாலை நெரிசலானதால் ஒரு மாற்றுப் பாதைக்கான தேவைகள் இருந்தது. அதுவே லூப் சாலைத் திட்டத்திற்கான அடிப்படை காரணமாக அமைந்தது. இந்த மோதலின் மையப் புள்ளி நிலத்தின் உரிமையாளர் அரசு என்றாலும் ,அந்த நிலத்தின் மீது மீனவர் சமூகங்களுக்கு இருக்கும் பாரம்பரிய பயன்பாட்டு உரிமையாகும். அரசாங்கத் தரப்பில் இது பொதுப் போக்குவரத்துக்கான சாலை என்று அனுமதிக்க முடியாத நிலைப்பாடு இருந்தது.

மீனவர்கள் தரப்பில் இந்த நிலம் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த தங்கள் வாழ்வாரத்தை சார்ந்திருக்கும் பாரம்பரிய பகுதி என்று வாதம் வந்தது .லூப் சாலை உருவானபோது மீனவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை மாற்றியமைத்தது. மீன் வலைகளை உலர்த்தவும் மீன்கள் விற்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்ட திறந்தவெளி இப்போது வாகனங்கள் செல்லும் சாலையாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட மீன் சந்தையாகயும் மாறி இருப்பது வரலாறு” என்று இருவரும் லூப் சாலை பற்றிச் சிந்தித்துக் கொண்டே சென்றார்கள்.

“1950களில் சென்னை சாந்தோம் கடற்கரை பகுதியில் உள்ள நொச்சிக்குப்பம், டாேமிங் குப்பம் மல்லிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்கள் இருந்த இடத்தில் ஒரு சாலை வைப்பதற்கான முடிவு செய்தது அரசாங்கம். இந்தச் சாலை மீனவர்களின் பாரம்பரிய வாழ்க்கையும் மீன் வியாபாரத்தையும் பாதிக்கும் என்று சொன்னார்கள் மீனவர்கள். எங்கள் வாழ்விடத்தையும் மீன் வியாபாரத்தையும் பாதிக்கும் என்று அவர்கள் வாதிட்டதால், மீனவர்களைக் கடலில் இருந்து பிரிக்க ஒரு தடையாக இருந்தது. சென்னையை அழகுபடுத்துவதற்காக, இந்த சாலை அமைப்பதாகச் சொன்னார்கள். மீனவர் சமூகங்களில் பாரம்பரிய பாதையாக இருந்து அதுக்கப்புறம் நகர்ப்புற போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த லூப் சாலை அமைப்பதற்கு முன்னாடி” என்று இருவரும் பேசிக் கொண்டே சென்றார்கள்.

1940கள் மற்றும் 1950களில் நகர்ப்புற மேம்பாட்டு அறக்கட்டளை அறக்கட்டளை. சாந்தாேம் நெடுஞ்ச சாலையில் அதாவது காமராஜர் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்துடன் கடற்கரை ஓரமாக ஒரு மாற்று சாலை பைபாஸ் ரோடு அமைப்பட்டது. இந்தச் சாலை 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டு கலங்கரை விளக்கத்திலிருந்து பட்டினப்பாக்கம் வரைக்கும் சுமார் 2.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டு இருக்கு. இது போக்குவரத்துச் சுழற்சியின் ஒரு பகுதியாக செயல்படுவதால் லூப் சாலை என்று பெயர் மாற்றப்பட்டது. இந்தச் சாலை அமைக்கப்பட்டதும் பல ஆண்டுகளாக தங்கள் வாழ்வதற்கான வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் சாலையின் ஓரங்களில் மீன் கடைகளை வைத்து விற்ற மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், சென்னை மாநகராட்சி பகுதியில் மீன் விற்பனையாளர்களுக்கான நவீன மீன் சந்தைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது.

1949–ம் ஆண்டு நகர மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் 1956 ஆம் ஆண்டு மத்திய அரசின் குடிசை மாற்று மேம்பாட்டத் திட்டத்தில் மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் திட்டங்களுக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்தப் பகுதி மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் இந்தச் சாலை கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை களையும் ஆமை கூடு கட்டும் பகுதிகளையும் பாதிக்கிறது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி தற்போது மீனவர்களுக்கான மீன் அங்காடியை வைத்து கொடுத்தது 1985 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் காலத்தில் ஒரு அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை அப்புறப்படுத்த முயன்ற போது மீனவர்கள் கடுமையான போராட்டம் நடத்தினர் இந்த மோதலில் சில மீனவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சில நிபந்தனைகளுடன் சாலை அமைக்க்கும் திட்டத்திற்கு அனுமதித்தது. 2023 ஆம் ஆண்டு சாலையோர மீன் கடைகளால் ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசல் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடுத்தது .இதனை தொடர்ந்து மாநகராட்சி சாலைகளில் இருந்த கடைகளை அகற்றத் தொடங்கினர் .

இந்தச் சாலை தங்களுக்கு சொந்தமான பாரம்பரிய நிலத்தில் அமைக்கப்படுவதாகவும் இது மீன்பிடி கிராமங்களுக்கு இடையிலான உள்சாலை மட்டுமே இருக்கலாமே தவிர பொது போக்குவரத்துக்காக இருக்க கூடாது என்று மீனவர்கள் வாதிட,

இது மீனவர் வாழ்வதற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என அரசு உறுதி அளித்த பிறகு மீனவ சமூகத்தினர் ஒப்புக்கொண்டனர்.இந்த வழக்குகளை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் மீனவர்களின் நலன் கருதி மெரினா கடற்கரை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் வாழ்வு முக்கியமானது என்று கூறியது .

2023–ம் ஆண்டு, சிங்காரச் சென்னை என்ற திட்டத்தில் சாலையோர மீன் கடைகளை அகற்றும் முயற்சியில் அரசாங்கம் முனைந்த போது ஏற்பட்டதே இந்தப் பெரிய போராட்டத்திற்கு முக்கிய காரணம்.

மாநகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே அறிவிப்பின்றி கடைகளை அகற்றியதால் மீனவர்கள் மீன்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து மீனவர்களுக்கு நவீன மீன் சந்தையை நிறுவினர்” என்று கார்த்திக்கும் யுவராஜும் பேசிக் கொண்டே லூப் சாலையில் நடந்தார்கள். இந்தச் சாலை சென்னையின் நகர்ப்புற வளர்ச்சி, மீனவ சமூக மக்களின் வாழ்வுரிமை, அரசியல் சமூக மோதல்கள் என்று உரிமைப் போராட்டத்தின் நீட்சியாய் நீண்டு சென்று கொண்டிருந்தது, கடல் அலைகளும், மீன்களின் வாசமும் ஒரு சேர வீசிக் கொண்டிருந்தது, லூப் சாலையில்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *