வாழ்வியல்

லியொனார்டோ டா வின்சியால் கிபி 1488 வடிவமைக்கப்பட்ட பறக்கும் இயந்திரம்

மறுமலர்ச்சிக் கால தொழில்நுட்பங்களில் நோக்குநிலை காட்சி, காப்புரிமை சட்டங்கள், இரட்டை ஓட்டு குவிமாடங்கள், நட்சத்திர வடிவ அரணமைத்த கோட்டைகள் போன்ற மேம்பாடுகளைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

மறுமலர்ச்சிக் கால ஓவியர்களும் பொறியியலாளர்களுமான டக்கோலா, லியொனார்டோ டா வின்சி போன்றோர்களின் குறிப்பு நூல்களில் இருந்து அக்காலத்திய இயந்திரவியல் அறிவை அறியலாம்.

பண்டைய உரோமின் கட்டிடங்களால் தூண்டப்பட்ட கட்டிடவியலாளர்களும் பொறியாளர்களும் பிளாரென்சின் தேவாலய குவிமாடம் போன்ற பெரும் குவிமாடங்களை கட்டினர். இந்த மாடத்திற்கான பெரிய கட்டுமானங்களை மேலே கொண்டு செல்வதற்காக இதன் கட்டிட வடிவமைப்பாளர் பிலிப்போ புருனெல்சுக் வடிவமைத்த பாரமுயர்த்திக்கு முதன்முதல் காப்புரிமை வழங்கப்பட்டது.

அறிவியல் மறுமலர்ச்சியும் தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையடுத்தது ஒன்றாக வளர்ந்தன.

இயக்குவகை அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு (1441) கூடுதலான நூல்கள் வெளியாகக் காணமாக அமைந்தது.

தொலைதூரம் செல்லக்கூடிய கர்ராக் கப்பல்கள் மூலமாக கண்டுபிடிப்புக் காலத்தில் அமெரிக்காக்கள், ஆசிய நாடுகளில் ஐரோப்பியர்களின் குடிமைப்படுத்தல் நிகழ்ந்தது.

புதிய நிலவரைபடங்களும் கடல்வழி தடங்களும் ஆவணப்படுத்தப்பட்டு மேலும் கடல்வழி கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலின.

ஐரோப்பாவில் குடிமையியல் சட்டங்கள் மீண்டும் பயனுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *