செய்திகள்

லால்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள் முட்டியதில் 19 பேருக்கு காயம்

திருச்சி, பிப்.8–

லால்குடி ஜல்லிக்கட்டில் 531 காளைகள் பங்கேற்றன. இதில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர்.

லால்குடி கீழ வீதி மகாமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி மட்டுமல்லாது தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து 531 காளைகளும், 216 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.ஜல்லிக்கட்டை நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை அ.தி.மு.க. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தொடங்கி வைத்தார்.531 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதுபோல் இந்த போட்டியில் 216 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நேற்று காலை 9.30 மணி தொடங்கி மதியம் 3.30 வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கியோரில் 19 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு ஜல்லிகட்டு தளத்திலேயே புதூர் உத்தமனூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் செல்வநாயகம் தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது. 50 பேர் கொண்ட குழுவினராக களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டதும் அவை சீறிப்பாய்ந்து சென்றன. அவற்றை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கமுயன்றனர்.

இதில் பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல் சென்று பரிசுகளை தட்டிச்சென்றன. அதுபோல் ஏராளமான காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.விழாவில் காளைகளை அடக்கியோருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வேட்டி, துண்டு, எல்சிடி டிவி, ரொக்கம் ஆகிய பரிசுகளை ஜல்லிக்கட்டுப் பேரவை திருச்சி மாவட்டச் செயலர் காத்தான் உள்ளிட்ட விழா குழுவினர் வழங்கினர். லால்குடி நடுத்தெரு சுதாகர் ஜல்லிக்கட்டு கமிட்டி உறுப்பினர் மாட்டை அவிழ்க்கும் போது கத்தி கிழித்து கையில் காயம் ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக ஜல்லிக்கட்டை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் முக்கிய இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் காத்தான் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

விழாவில் லால்குடி வருவாய்க் கோட்டாட்சியர் வைத்தியநாதன், காவல் துணைக் காண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் வட்டாட்சியர் சித்ரா, காவல் ஆய்வாளர் ஜாபர் அலி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் சூப்பர் நடேசன் மற்றும் டி.அசோகன், தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.பாலன், முன்னாள் மாவட்ட கழக அவைத் தலைவர் அன்பில் தர்மதுரை, மாவட்டக் கழக இணைச் செயலாளர் ரீனா செந்தில் பொதுக்குழு உறுப்பினர் விஜயா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வி.டி.எம். அருண் நேரு, பேரூர் செயலாளர் பொன்னி சேகர், மற்றும் சிந்தாமணி கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.சகாதேவ் பாண்டியன், மீனவரணி கண்ணதாசன், மற்றும் கழக முன்னோடிகள் சித்திரசேனன், நகர் சரவணன், துரை பிரதீப், விக்னேஷ் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பிரசன்னக்குமார், ஜெயசீலன், முத்துக்குமார், சரவணன், கோதைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *