செய்திகள்

லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரகம் வழங்கும் மகள்

பாட்னா, நவ–11

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வரும் லாலு பிரசாத் யாதவுக்‍கு, அவரது இளைய மகள் ரோகினி தனது சீறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

வரும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ்,

பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், நீண்டகாலமாக சிறுநீரகக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் சிங்கப்பூரில் பரிசோதனைக்காகச் சென்றிருந்த லாலுவுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு சிங்கப்பூர் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

சிறுநீரகம் வழங்கிய மகள்

இதையடுத்து, சிங்கப்பூரில் வசிக்‍கும் லாலுவின் இரண்டாவது மகளான ரோகினி, தனது தந்தைக்‍கு சிறுநீரகத்தை அளிக்‍க முன்வந்தபோது, அதனை ஏற்க லாலு சம்மதம் தெரிவிக்‍கவில்லை எனக்‍ கூறப்படுகிறது. பின்னர் குடும்ப உறுப்பினர்களின் தொடர் வலியுறுத்தலுக்‍கு பின்னர் லாலு பிரசாத் யாதவ், தற்போது ஒப்புக்‍கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ரோகினி ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘எனது சிறுநீரகத்தை அப்பாவுக்கு தானமாக வழங்குவதில் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இம்மாத இறுதியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற வாய்ப்புள்ளது என்று கூறி உள்ளார்.

பீகார் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி தம்பதியின் ஏழு மகள்களில் ரோகினி இரண்டாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *