செய்திகள்

‘லாக் டவுன்’ பரிதாபம்: 100 நாள் வேலைத்திட்டத்தில் கல் உடைக்கும் கிரிக்கெட் வீரர்

டேராடூன், ஆக. 1-

பொதுமுடக்கத்தால் (லாக் டவுன்) வருமானமின்றி தவித்த சக்கர நாற்காலி கிரிக்கெட்வீரர், 100 நாள் வேலை திட்டத்தில் கல் உடைக்கும் வேலை பார்த்து வருகிறார்.

உத்தரகாண்ட் மாநிலம் ராயல்கோட் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜேந்திர சிங் தாமி, சக்கர நாற்காலி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி, பயிற்சியாளராகவும் பணியாற்றினார். விளையாட்டின் மூலம் கிடைத்த பரிசுத் தொகை, பயிற்சியாளர் பணி மூலம் கிடைத்த வருவாய் ஆகியவற்றின் மூலம் குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் பெங்களூரில் பயிற்சியில் இருந்த அவர் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ராயல்கோட் திரும்பினார்.

கையில் இருந்த பணம் எல்லாம் செலவானதை அடுத்து, மாநில அரசின் தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையில் கல் உடைக்கும் பணியில் சேர்ந்துள்ளார். ஒருநாள் முழுவதும் கல் உடைத்தால் 400 ரூபாய். அதனை வைத்து வயதான பெற்றோர், உடன் பிறந்தவர்களை கவனித்து வருகிறார். இத்தகவல் உள்ளூர் ஊடகங்களில் வெளியானதும் இந்திய ஒலிம்பிக் சங்கம் 50 ஆயிரம் வழங்கியுள்ளது. மாநில அரசும் 20 ஆயிரம் தந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *