வாழ்வியல்

லவங்கப்பட்டை வளர்த்து லாபம் பெறுவோம்!

உணவு, பற்பசை, சோப்பு மற்றும் பல பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் லவங்கப்பட்டை, சின்னமம் என்னும் தாவர இனத்தைச் சார்ந்தது. இதில் 4 வகை இனங்கள் உள்ளன. இம்மரங்களை வளர்க்க மணற்பாங்கான நிலம் போதும். வடிகால் வசதியுடன் 12 மணிநேர சூரிய வெளிச்சம் போதுமானது. நைட்ரஜன் சத்துள்ள கோழி, முயல், ஆட்டுக் கழிவுகளை உரமாகப் போடலாம். மக்கிய இலைகள், தொழு உரம் போடலாம்.

ரசாயன உரம் தேவையென்றால், யூரியாவுடன் 40–42% நைட்ரஜன், 27–27% பாஸ்பரஸ் பென்ட் ஆக்சைடு, பொட்டாசியம் ஆக்சைடு ஆகியவற்றைச் சேர்த்துப் போடலாம். அரபு நாடுகள், ஸ்ரீலங்கா, வட இந்தியா, சீனா போன்ற இடங்களே இதன் பூர்வீகம். குறைந்த இடத்தில் நல்ல லாபம் பெறலாம்.

இதற்கு வரும் நோய்கள்…

1) பூச்சிகள்:– தத்துப் பூச்சிகள், தண்டு துளைப்பான், சின்மைன் வண்ணத்துப் பூச்சிகள் உருவாகும்.

2) புள்ளிகள்: – வளரும் இளமரக் கன்றுகளில் பிரஷன் நிறத்தில் புள்ளிகள் தோன்றும். இதைக் கட்டுப்படுத்த போர்பி மிக்சருடன், பூஞ்சாணத் தடுப்பான் கலந்து பயன்படுத்துங்கள்

வண்ண பூஞ்சாணம்:–

வண்ண நிற பூஞ்சாணம் தோன்றும். இதைக் கட்டுப்படுத்த வேர்களில் கந்தகப் பொடியை கட்டி வைக்கலாம்.

இது ரத்த அழுத்தத்தை சீராக்கும் மருந்தாகும். ஜீரண சக்தியை அதிகமாக்கும். சர்க்கரை அளவை குறைக்கும்.

மேலும் அறிய:–

www.tnan.gov.in, www.spicesboard.gov.in, www.iacr.gov.res.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *