செய்திகள்

லடாக்கில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்

லடாக், ஜூன் 28–

லடாக்கில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

லடாக்கில் இன்று காலை 6.10 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 18 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் பற்றிய உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *