செய்திகள்

லடாக்கில் இன்று அதிகாலை 4.8 ரிக்டரில் திடீர் நிலநடுக்கம்

லடாக், செப். 16–

லடாக்கில் இன்று அதிகாலையில் 4.8 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த லடாக் பகுதி தனி யூனியன் பிரதேசமாக 2019 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்திய ஒன்றியத்தின் லடாக் பிராந்தியத்தில் உள்ள அல்ச்சிக்கு (லே) வடக்கே 189 கி.மீ. வடக்கு பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.19 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உயிர்ச்சேதம் இல்லை

இந்த நிலடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக் பகுதியைச் சுற்றி தொடர்ந்து நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. 2020ஆம் ஆண்டு ஜூன், 2021ஆம் ஆண்டு அக்டோபர், 2022ஆம் ஆண்டு மார்ச் என தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *