செய்திகள்

லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக லட்சுமி நியமனம்

சென்னை, ஜூன்.11-

லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை இணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய லட்சுமி திடீரென்று பணியில் இருந்து விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார். ஐ.பி.எஸ்.அதிகாரியான இவரது விருப்ப ஓய்வு கடிதத்தை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. உயர் போலீஸ் அதிகாரிகள் இவரது விருப்ப ஓய்வு கடிதத்தை திரும்பப்பெற வற்புறுத்தினார்கள். லட்சுமி விடுமுறையில் சென்று விட்டார். இதனால் தென் சென்னை இணை கமிஷனர் பதவிக்கு நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் விடுமுறையில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்பிய லட்சுமி, உயர் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று தனது விருப்ப ஓய்வு கடிதத்தை திரும்ப பெற்றார், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். நேற்று அவரை லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக பணி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *