செய்திகள்

ரேஷன் கடைகளுக்கு 20–ந்தேதி விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 18–

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (20ந்தேதி) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளர்கள் வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணியை கடந்த ஆண்டு ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை நாட்களில் ரேஷன் கடை பணியாளர்கள் மேற்கொண்டனர்.

இந்த 2 நாள்கள் பணிக்காலத்தை ஈடுசெய்யும் வகையில், கடந்த ஜூன் 15ந்தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் நாளை மறுநாள் விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *