சிறுகதை

ரேபிட்டோ – ராஜா செல்லமுத்து

ஒரு விழாவுக்குச் சென்றான் விக்னேஷ். தடபுடலான அந்த விழாவை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதற்கு எந்த வாகனமும் கிடைக்காததால் உடனே அவன் இருந்த இடத்தில் இருந்தே ரபிடோ புக் செய்து அந்த இரு சக்கர வாகனத்திற்கு நின்று கொண்டிருந்தான்.

அந்த இரு சக்கர வாகன ஓட்டி விக்னேஷ் புக் செய்த இடத்தை பற்றி அறியாதவனாக இருந்திருப்பான் போல. எந்த இடம்? எந்த இடம்? என்று விக்னேஷ் பலமுறை கேள்வி கேட்டு தொலைத்து கொண்டிருந்தான்.

இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் அவன் சவாரியை கட் செய்து விடலாமா என்று கூட நினைத்தான்.

சரி வேண்டாம் வந்தது வந்துவிட்டார். பார்க்கலாம் என்று நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான்.

அவர் வருவதற்கு சற்று காலதாமதம் ஆனது.

அவன் புக் செய்த இடத்திற்கும் அவர் இருக்கும் இடத்திற்கும் முதலில் நான்கு நிமிடங்கள் காட்டியது. அதே மேப்பில் இப்போது எட்டு நிமிடங்கள் காட்டியது.

என்ன இப்ப நாலு நிமிஷம் காட்டுச்சு. அது இப்ப எட்டு நிமிஷமா இருக்கு. ஒருவேளை வழிதெரியாம இருக்கிறாரா? என்று நினைத்த விக்னேஷ் அவருக்குப் போன் செய்தான்.

‘இந்த வந்துட்டு இருக்கேன் சார். உங்க பக்கத்துல இருக்கேன்’ என்று பொய் சொன்னார்.

அவர் வாய் வழியே பொய் சொல்லலாம். ஆனால் கூகுள் மேப்பில் உண்மையை மறைக்க முடியவில்லை.

முதலில் நான்கு நிமிடம் காட்டிய அந்த மேப் இப்போது எட்டு நிமிடத்தில் நின்றது.

வேறு வழியில்லை புக் செய்து விட்டோம் வரட்டும் என்று நின்று கொண்டிருந்தான்.

ஒருவழியாக அடித்துப் பிடித்து 10 நிமிடங்கள் கழித்து வந்து நின்றார்.

இருசக்கர வாகன ஓட்டுநர், முதலில் ஸ்கூட்டியில் வந்த நபரைப் பார்த்தபோது, இவர் ரபிடோ ஒருவராக இருக்க முடியாது. வேறு யாரோ? என்று முதலில் நினைத்தான் விக்னேஷ்.

காரணம் அவ்வளவு தடிமன். அதுவும் சின்ன ஸ்கூட்டி மொத்த இடத்திலும் அவர் மட்டுமே அமர்ந்து இருப்பது போன்ற உணர்வு. ஆனால் அவன் புக் செய்த இடத்திற்கும் அந்தத் தடிமனான ஆள் ஓட்டிவந்த ஸ்கூட்டி நம்பர் சரியாக இருந்தது.

அய்யய்யோ இப்பிடி இருக்கிறான்? இவன் கூட எப்படி போறது? என்று நினைத்தான் விக்னேஷ்.

அவரின் உடல் அமைப்பை பார்த்து சிரிதறு அருகிலிருந்த டூவீலர் காரர், ‘என்ன ரேபிட்டோ புக் பண்ணிட்டீங்களா?’ என்று ஒரு நமட்டு சிரிப்போடு கேட்டார்.

அதற்கு ‘ஆமாம்’ என்று தலையாட்டினான் விக்னேஷ்.

ஆனால் இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு அதுவும் இந்த சின்ன ஸ்கூட்டியை வைத்து எப்படி இவர் பிசினஸ் செய்கிறார்? என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

அருகில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனக் காரர்கள் இந்த வண்டியை ஓட்டி வந்தவரை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தார்கள்.

சார் கொஞ்சம் தள்ளி உக்காருங்க. நான் எங்கே உட்காருவது ? என்று கேட்டபோது கொஞ்சம் தள்ளி அமர்ந்தார் அந்த டிரைவர் .

ஆனால் அவர் எவ்வளவு தள்ளி அமர்ந்தாலும் நமக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்த விக்னேஷ், வேறு வழியின்றி அந்த தடிமனான உருவத்திற்கு மத்தியில் அமர்ந்தான்.

அவனுக்கு கிடைத்த இடமோ கை அகலம் .அந்த ஓட்டுநர் முழுதும் பிடித்து அமர்ந்து இருப்பது போன்ற உணர்வில் இருந்தார் .

வண்டியில் ஏறிய விக்னேஷ் ஓடிபி நம்பரை சொன்னான்.குறித்து வைத்துக்கொண்டான் டிரைவர்

போகலாமா ? என்று கேட்க

போகலாம் என்று அரை மனதோடு சொன்னான் விக்னேஷ்.

காரணம் மொத்த சீட்டில் முக்கால்வாசிக்கு மேல் டிரைவர் பிடித்த அமர்ந்திருந்தான் அந்தத் தடிமன் .

ஆனால் தனக்கு வழங்கப்பட்ட சீட் கொஞ்சமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டான் விக்னேஷ்.

ஒருவழியாக அந்த வண்டி புறப்பட்டது .விக்னேஷைப் பார்த்து அங்கிருப்பவர்கள் சிரித்தார்கள்.

வழி நெடுக இந்த தடியான நபருடன் செல்வதைப் பார்த்து அத்தனை பேரும் சிரித்ததை விக்னேஷ் தாங்கிக்கொள்ள முடியவில்லை .

அமைதியாக வந்தான் விக்னேஷ். ஆனால் அந்த நபர் தொனதொன என்று பேசிக்கொண்டே வந்தார்.

கடைசியில் விக்னேஷ் இறங்க வேண்டிய இடம் வந்தது.

இந்த இடம் போதும் என்றான் விக்னேஷ் .

சிரித்தபடியே இருந்த அந்த இரு சக்கர வாகன ஓட்டி விக்னேஷ் கொடுத்த பணத்தை வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தார் .

ஏன் சார் ? எதுக்கு வேணாம் என்று விக்னேஷ் கேட்டபோது,

இல்ல என்னவோ உங்க கிட்ட பணம் வாங்க வேணாம்னு தோணுச்சு அதுதான். எனக்கு வேண்டாம் என்று மறுபடியும் சொன்னார் அந்த ஓட்டுநர்

நீங்கள் பெட்ராேல் போட்டு வண்டியை ஓட்டி வந்து கொண்டு இருக்கிறீர்கள்? அதற்கான சன்மானம் கூட கொடுக்கவில்லை என்றால் என் மனது கேட்காது என்று விக்னேஷ் பணத்தைத் திணித்தான்.

இல்ல தம்பி இந்த பணம் எனக்கு வேண்டாம். நீங்க சொன்னது மாதிரி நான் பெரிய வண்டி எடுத்துட்டு வந்து இருக்கணும். சின்ன வண்டி எடுத்துட்டு வந்து உங்களை உட்கார வச்சு கஷ்டப் படுத்திட்டேன் .அதான் என் மனசு உறுத்துது . இந்த பணத்தை நீங்களே வச்சுக்கங்க. அடுத்து வரும் போது பெரிய வண்டி எடுத்துட்டு வரேன்.என் உருவத்துக்கும் ஸ்கூட்டிக்கும் சம்பந்தம் இல்லைதான். ஏதோ பத்து ரூபாய் சம்பாதிக்கனும்னு வீட்டுல உள்ள புக் பண்ணி வச்சிருக்கேன். அது தவறுதான் அடுத்த முறை நான் எடுத்துக்கிறேன் என்ற அந்த ஓட்டுநர் விக்னேஷ் இடம் பணம் வாங்காமல் சென்று விட்டார்.

இப்படிப்பட்ட மனுஷன நம்ம தவறாக நினைத்தது தவறு. என்னை மன்னிச்சிருங்க ஸாரி என்று அந்த தடிமனான டிரைவர் போன பாேது, வணங்கினான் விக்னேஷ்.

தடிமான அந்த நபர் வண்டியை ஓட்டியபடியே போய்க்கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.