செய்திகள்

ரெயில் பயணிகளுக்கு கோத்ரேஜ் கிருமி நாசினி வழங்க ஏற்பாடு

சென்னை, ஜூலை. 22-

கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த கோத்ரேஜ் ப்ரொடெக்ட், தனிப்பட்ட மற்றும் வீட்டு சுகாதாரம் தொடர்பான பன்னிரண்டு தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. கோத்ரேஜ் தயாரிப்புகளான ஹெல்த் சோப், பாடி வாஷ், கிருமியில் இருந்து பாதுகாக்கக் கூடிய பழம் மற்றும் காய்கறி வாஷ், கிருமி பாதுகாப்பு டிஷ் வாஷ் திரவம், ஒரு ரூபாய்க்கு கை சானிடைசர் பாக்கெட், ரெயில்

பயணத்தின் போது கிருமிநாசினி தெளிப்பு, பிடபிள்யூ 95 முகக் கவசங்கள் மற்றும் பல்நோக்கு கிருமிநாசினி கரைசல் உள்ளிட்டவை கிருமிகள், பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக 99.9% பாதுகாப்பை வழங்குகின்றன.

கோத்ரேஜ் நிறுவனத்தின் இந்தியா மற்றும் சார்க் நாடுகள் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி சுனில் கட்டாரியா, ஒரு பிராண்ட் என்ற முறையில், கோத்ரேஜ் ப்ரோடெக்ட் அடுத்த 3 ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் வர்த்தகம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது.” என்றார்.

“பயணிகள் மற்றும் ரெயில் ஊழியர்களிடையே பயண சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாங்கள் இந்திய ரெயில்வேயின் மத்திய ரெயில்வே மண்டலத்துடன் இணைந்து செயல்படுகிறோம். எங்கள் புதிய தயாரிப்புகளில் 2 லட்சம் கை சுத்திகரிப்பான சிறிய ரக பாக்கெட்டுகள், பயணத்தின் போது பயன்படுத்தும் கிருமிநாசினி தெளிப்பான் உள்ளிட்டவை, ரெயில்களில் பாதுகாப்பான பயண அனுபவத்திற்காக பயன்படுத்தப்படும். டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களின் மேற்பரப்புகளையும் கிருமி நீக்கம் செய்ய எங்கள் காற்று மற்றும் மேற்பரப்பு கிருமிநாசினி தெளிப்பான் பயன்படுத்தப்படும்.’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *