புதுடெல்லி, நவ.1–
ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை இன்று (1–ந்தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.
நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும், பயணிகள் அதிக விரும்பவது ரெயில் பயணத்தை மட்டுமே. ஆனால் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், டிக்கெட் கிடைப்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்வதற்கு முன்பே திட்டமிட்டு, டிக்கெட் முன்பதிவு செய்ய இந்த முன்பதிவு நல்வாய்ப்பாக இருந்தது. ஆனாலும் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், கடைசி நேரத்தில் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்வதும் வழக்கமாக நடக்கிறது. சுமார் 21 சதவீதம் பேர் டிக்கெட்டுகளை ரத்து செய்யாமலும், பயணம் மேற்கொள்ளாமல் 5 சதவீதம் பேரும் உள்ளனர்.
இதனால் உண்மையான பயண தேவையை ஊக்குவிக்கும் வகையிலும்,
அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கிடைப்பதை அதிகரிக்கவும் புதிய வசதியை அறிமுகப்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அந்த வகையில் ரெயில்களின் முன்பதிவு வசதியை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக ரெயில்வே துறை குறைத்துள்ளது.
இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ரெயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பணிகளுக்கு முன்பதிவு காலம் 365 நாட்களாக உள்ளது.