சென்னை, அக். 15–
சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள தெற்கு ரயில்வே உதவி எண்களை அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் ரெயில்களின் சேவையில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், ரெயில் சேவை குறித்த தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள உதவி எண்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
044–25330952, 044–25330953 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொண்டு ரெயில் சேவை குறித்த தகவல்களை கேட்டறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.