செய்திகள்

ரெயில் சக்கரம் காற்றாலை கருவிகள் தயாரிப்பில் வீல்ஸ் இந்தியா டிராக்டர் தீவிரம்

வாகன உற்பத்தி நிறுவனங்கள் தேக்க நிலை எதிரொலி

ரெயில் சக்கரம் காற்றாலை கருவிகள் தயாரிப்பில் வீல்ஸ் இந்தியா டிராக்டர் தீவிரம்

நிர்வாக இயக்குனர் ஸ்ரீவத்ஸ்ராம் தகவல்

 

சென்னை, ஜூன் 22–

பாரம்பரியம் மிக்க டி.வி.எஸ்.குரூப் நிறுவனமான ‘வீல்ஸ் இந்தியா’, வாகனங்களுக்கு ஸ்டீல் சக்கரம், ஏர்சஸ்பென்ஷன், உதிரி பாகங்கள் தயாரித்து சப்ளை செய்து வருகிறது. ஊரடங்கு காரணமாக வாகன தயாரிப்பு விற்பனை தேக்க நிலை அடைந்துள்ளது. இதனால் வீல்ஸ் இந்தியா டிராக்டர்களுக்கு சக்கரங்கள், ரெயில்வே சக்கரங்கள், காற்றாலை உதிரி பாகங்கள் தயாரிப்பில் கூடுதல் ஆர்வம் கொண்டுள்ளது என்று இதன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீவத்ஸ்ராம் காணொலி மூலம் தெரிவித்தார்.

ஊரடங்கு காரணமாக 2020–21 முதல் காலாண்டு நிதி நிலை செயல்பாடு ஒட்டு மொத்த பாதிப்படைந்தது, இருந்தாலும் கடந்த ஆண்டை போல காற்றாலை மற்றும் டிராக்டர் வீல் துறையில் சிறப்பாக செயல்படுகிறது என்று ஸ்ரீவத்ஸ்ராம் தெரிவித்தார். உருக்கு சக்கரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு தனிப்பட்ட நிகர லாபம் 4.62 கோடியாக சரிந்துள்ளது. உருக்கு சக்கரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு தனிப்பட்ட நிகர லாபம் ரூ.4.62 கோடியாக சரிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2018–19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.19.71 கோடியாக காணப்பட்டது.

ஜனவரி–மாா்ச் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.855.08 கோடியிலிருந்து சரிந்து ரூ.544.72 கோடியானது.கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2019–20–ம் முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய தனிப்பட்ட நிகர லாபம் இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.75.67 கோடியிலிருந்து ரூ.54.11 கோடியாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் ரூ.3,188.84 கோடியிலிருந்து ரூ.2,438.72 கோடியாக சரிந்துள்ளது.கடந்த நிதியாண்டுக்கு பங்குதாரா்களுக்கு இறுதி ஈவுத் தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.2.65 வழங்க நிறுவனத்தின் இயக்குனர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இடைக்கால ஈவுத்தொகை ரூ.3-ஐயும் சோ்த்து கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ஈவுத்தொகையாக மொத்தம் ரூ.5.65 வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீவத்ஸ்ராம் தெரிவித்தார்.

வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் கும்மிடிபூண்டி அலுமினிய வார்ப்பட தொழிற்சாலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செயல்படத் துவங்கும். இதனால் 3–வது காலாண்டில் வர்த்தகம் உயரும். இந்த புதிய ஆலை உலக தர தயாரிப்பு பல சர்வதேச வாகன நிறுவனங்களின் ஆர்டர்களை பெற்றுத் தரும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *