வர்த்தகம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ரூ. 648 கோடிக்கு வீடு வாங்க கடன்; ரூ.144 கோடி லாபம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ரூ. 648 கோடிக்கு வீடு வாங்க கடன்; ரூ.144 கோடி லாபம்:

நிர்வாக இயக்குனர் யஷ் பால் குப்தா தகவல்

சென்னை, நவ.18

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் முதல் அரையாண்டில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) ரூ. 648 கோடிக்கு வீடு வாங்க கடன் வழங்கி உள்ளது. இதன் லாபம் ரூ.144 கோடி ஆக உள்ளது. கொரோனா காலத்திலும் திறமையாக செயல்பட்டு லாபம் சம்பாதித்துள்ளது என்று நிர்வாக இயக்குனர் யஷ் பால் குப்தா தெரிவித்தார்.

இந்நிறுவனம் இதுவரை வழங்கியுள்ள மொத்த வீட்டுவசதி கடன் 5% உயர்ந்த ஒரு ரூ.12 ஆயிரத்து 89 கோடியாக உள்ளது. சுயதொழில் புரிபவர்களுக்கு வழங்கிய கடன், மொத்த கடனில் 51.7% இடம்பிடித்துள்ளது.

இந்திய தணிக்கை முறையின்படி, கடன் நஷ்டம் ஏதும் ஏற்படாமல் சமாளிக்க மொத்த கடனில் 2% அளவாக ரூ.243 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிறுவனம் இதுவரை 153 கிளைகள், 24 சார்பு கிளைகள் உள்ள உள்ளது என்றார் நிர்வாக இயக்குனர். இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் 30ந் தேதியுடன் முடிவடைந்த 2வது காலாண்டு மற்றும் அரையாண்டு நிதி நிலை அறிக்கையை நிர்வாக இயக்குனர் யஷ் பால் குப்தா வெளியிட்டார்.

கொரோனா காலத்திலும் இந்நிறுவனத்தின் செயல்பாடு வலுவாக இருப்பதால் லாபத்தில் 26% தொடர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காலாண்டு முடிவுகளின்படி இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 4% உயர்ந்து ரூ.350.2 கோடியாக உள்ளது.

நிகர வட்டி வருவாய் ரூ.139.6 கோடியாகவும், நிகர லாபம் ரூ.80.8 கோடியாகவும் உள்ளது. ரூ.527.7 கோடி அளவுக்கு கடன் அனுமதி வழங்கப்பட்டு, ரூ.467.2 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

அரையாண்டு முடிவுகளின்படி நிறுவனத்தின் மொத்த வருவாய் 4% உயர்ந்து ரூ.692.1 கோடியாக உள்ளது.

நிகர வட்டி வருவாய் ரூ.267.6 கோடியாகவும், நிகர லாபம் ரூ.144.8 கோடியாகவும் உள்ளது. ரூ.689.2 கோடி அளவிலான கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, ரூ. 648.8 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *