செய்திகள்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி: ஊட்டி ரேஸ் கிளப்பிற்கு சீல்

Makkal Kural Official

உதகமண்டலம், ஜூலை 5–

ரூ.822 கோடி குத்தகை பாக்கி காரணமாக ஊட்டி ரேஸ் கிளப்பிற்கு சீல் வைக்கப்பட்டது.

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுக்கு மேல் மெட்ராஸ் ரேஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. குத்தகை காலம் 1978 உடன் முடிந்த நிலையில் அதன்பிறகு குத்தகை தொகையை செலுத்தாமல் ரேஸ் கிளப் இயங்கி வந்துள்ளது. அரசு நோட்டீஸ் அளித்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து 2006ல் வருவாய்த்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 2019ல் குதிரை பந்தய மைதானத்தை மீட்க உத்தரவிட்டது. இதை அடுத்து ரேஸ் கிளப்பிற்கு சீல் வைத்து உதகை கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் அதிகாரிகள் 52.4 ஏக்கர் மைதானத்தை மீட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *