செய்திகள்

ரூ.70 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன் தங்கம் விலை  

Makkal Kural Official

சென்னை, ஏப். 11-

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை கடந்து தற்போது ஒரு சவரன் ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து ஒரு சவரன் ரூ. 70 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *