சென்னை, டிச. 26–
தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை தொட்டது.
டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த வாரம் பெரும்பாலும் குறைந்தே விற்பனையானது. வார தொடக்கத்தில் ரூ.57,120-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.56,800-க்கு குறைந்து விற்பனையானது.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் சவரனுக்கு ரூ.56,800-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.80 குறைந்து சவரன் ரூ.56,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கிறிஸ்துமஸ் நாளான நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800 க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,125-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 57,000 க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை காலங்கள் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை.