செய்திகள் வர்த்தகம்

ரூ.31 ஆயிரத்து 500 கோடி செலவில் சென்னை பெட்ரோலியம் – இந்தியன் ஆயில் இணைந்து நாகை சுத்திகரிப்பு ஆலை: மோடி அடிக்கல்

நாகை, பிப். 18

நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப் படுகையில் ரூ. 31,500 கோடியில் அமையவுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.1,200 கோடியில் முடிக்கப்பட்ட பணிகளையும் நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்றார்.

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ, சிபிசில் நிர்வாக இயக்குனர் ராஜு ஐலவாடி, நாகை மாவட்ட கலெக்டர் பிரவின் பி.நாயர், கூடுதல் ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கோட்டாட்சியர் பழனிகுமார், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க கதிரவன், நாகை வட்டாட்சியர் ரமாதேவி, திருமருகல் ஒன்றிய ஆணையர் என்.ஞானசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) க.அன்பரசு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பனங்குடி ஜமுனா செந்தில்குமார், நரிமணம் பி.என்.கார்த்திக், கோபுராஜபுரம் உமாமகேஸ்வரி ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வினோதினி கார்த்திக், மஞ்சுளா மாசிலாமணி மற்றும் சிபிசிஎல் அதிகாரிகள், அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பனங்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

சுத்திகரிப்பு ஆலை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) மேலாண் இயக்குநர் (பொறுப்பு) ராஜீவ் அகிலவாணி, இந்தியன் ஆயில் செயல் இயக்குநர் ஜெயதேவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ராமநாதபுரம்- தூத்துக்குடி வரையில் 143 கி.மீ. தூரத்துக்கு ரூ.700 கோடி மதிப்பில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் பணி தொடங்கப்பட்டு தற்போது முடிவுற்றுள்ளது. இந்தக் குழாய் மூலம் ஓஎன்ஜிசி உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கும் எரிவாயுவை தூத்துக்குடிக்குக் கொண்டு செல்ல முடியும். சென்னை மணலியில் ரூ.500 கோடியில் பெட்ரோலில் கந்தகத்தை அகற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 பிபிஎம் குறைவான பெட்ரோலை உற்பத்தி செய்ய முடியும். இந்த 2 திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்பணித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப் படுகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் இணைந்து ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்யும் வகையில் ரூ. 31,500 கோடி மதிப்பில் அமைச்சகம் இது.

இந்தியன் ஆயில் தமிழ்நாடு பிரிவு செயல் இயக்குனர் பி.ஜெயதேவன் பேசுகையில், இந்த ஆலைக்கான மின்சாரம், நீராவி இயற்கை எரிவாயு பொருளைக் கொண்டு செயல்படுத்தப்படும். தேவைப்படும் நீர் கடல் நீரை குடிநீராக மாற்றி பயன்படும். கழிவுநீர் சுத்திகரித்து மறுசுழற்சி செய்யப்படும். குருட் ஆயில் இறக்குமதிக்கு நடுக்கடலில் 13 கி.மீ. தூரத்தில் மிதவை இறக்குதளம் நிறுவப்படுகிறது. இதற்கு தேவையான பொருட்களில் 50% இந்தியாவிலேயே பெறப்படவுள்ளது. நிர்மான பணியில் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த ஆலை மூலம் நாகை பகுதி வளம்பெறும் என்று தெரிவித்தார்.

2024ம் ஆண்டில் உற்பத்தி துவங்கும்

காவிரி படுகையில் பனகுடியில் ஏற்கனவே 1993ம் அண்டு முதல் 1 மில்லியன் டன் குருட் ஆயில் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதன் அருகே 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறனுடன் நிர்மானிக்கப்படும். இந்த சுத்திகரிப்பு ஆலை 2024ம் ஆண்டில் உற்பத்தியை துவங்கும். இதில் சார்பு ஊழியராக 2 ஆயிரம் பேர் பணிபுரிவர். 600 நேரடி ஊழியர்கள் பணிபுரிவர். இதன் சார்பு உபகருவிகள் சப்ளை செய்யும் தொழிற்சாலைகளில் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று சென்னை பெட்ரோலியம் நிர்வாக இயக்குனர் (பொறுப்பு) ராஜீவ் ஐயலவாடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *