வாழ்வியல்

ரூ.3 லட்சத்தில் 52 அடி பரப்பில் 40 அடி உயரத்தில் வீடு: சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை

நாம் குடியிருக்கும் வீட்டினை பிரித்து கையில் எடுத்துச்செல்வது போலவும் சுவர்களை விரும்பியது போல் மாற்றிக்கொள்வது போலவும் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அந்த மாதிரியான வீட்டினை சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இரும்பு போன்ற உலோகம் இல்லாமல் கட்டிய இரண்டு மாடி வீட்டை ஐஐடி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இதனை பிரித்து நமக்கு விருப்பமான இடத்தில் கட்டிக்கொள்ளலாம். இதில் 20 பேர் வசதியாக தங்கவும் முடியும். இயற்கை பேரழிவின் போது நம்மை காத்துக்கொள்ளவும், ஏற்கனவே தங்கியிருக்கும் வீட்டிலும் இதனை பொருத்திக்கொள்ள முடியும். இந்த வீட்டின் முன்மாதிரி வடிவம் சென்னை ஐஐடி கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது.

வீட்டின் உலோக சட்டங்களை பிரித்து நமக்கு தேவையான இடத்தில் பொருத்தி கொள்ளலாம் என்று இதனை வடிவமைத்த மாணவர்கள் விளக்கமளித்துள்ளனர். இந்த சட்டங்கள் அலுமினியம் மற்றும் எஃகினால் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டங்களில் பொருத்தும் சுவர் போன்ற பேனல்கள் இரும்பு சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. மரத்திலான பேனல்களையும் சுவராக பயன்படுத்தலாம். கடந்த வருடம் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இடம் இல்லாமல் தவித்த மக்களை கருத்தில் கொண்டு இந்த மடிக்கும் வீட்டை கண்டுபிடித்ததாக மாணவர்கள் கூறுகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களாக திட்டமிட்டு சிவில் இன்ஜினியரிங் மாணவர்கள் 52 அடி பரப்பில், 40 அடி உயரத்தில் இந்த வீட்டினை வடிவமைத்துள்ளனர். டாய்லெட்டை தவிர மற்ற அறைகளின் சுவர் பேனல்களை அகற்றவும் மாற்றவும் முடியும். டாய்லெய் 13 மீட்டர் அகல பாக்ஸில் வீட்டின் ஒரு மூலையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்சாரம், தண்ணீர் வசதி மற்றும் பர்னிச்சர்கள் போடும் வகையில் வீட்டின் பேனல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை சுமார் 3 லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *