செய்திகள்

ரூ. 26 லட்சம் மோசடி: தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது நடிகை சினோ புகார்

சென்னை, நவ. 18–

ரூ. 26 லட்சம் மோசடி செய்ததாக தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது கானாத்தூர் காவல் நிலையத்தில் நடிகை சினேகா புகார் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சினேகா கமல்ஹாசன், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகை சினேகா தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், இரண்டு தொழிலதிபர்கள் ரூபாய் 26 லட்சம் மோசடி செய்ததாகவும் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று கூறியதாகவும் அதை நம்பி முதலீடு செய்ததாகவும் தற்போது வட்டி கேட்டதற்கு தன்னை மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார்.

தனியார் சிமெண்ட் மற்றும் மினரல்ஸ் நிறுவனம் ஒன்றின் பங்குதாரர்களான தம்பதி மற்றும் மற்றொரு பங்குதாரர் 3 பேர் தன்னிடம், தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காக கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் தருவதாக ஆசைக்காட்டியதன் பேரில் ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1 லட்சமும் கொடுத்ததாகவும் இதற்காக மாசம் ரூ. 1.80 லட்சம் லாபம் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் ஐந்து மாதம் ஆகியும் பங்கு தொகையும் தராமல், அசல் தொகையும் தராமல் இருப்பதாகவும், இதுகுறித்து கேட்டபோது பணம் தர முடியாது என அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *