செய்திகள்

ரூ.2,435 கோடி வங்கிக் கடன் மோசடி: 5 நகரங்களில் சி.பி.ஐ. சோதனை

புதுடெல்லி, ஜூன் 25–

ரூ.2,435 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் கிராம்ப்டன் கிரீவ்ஸ் முன்னாள் தலைவர் கவுதம் தாபர் மீது சிபிஐ முறைகேடு வழக்குப் பதிவு செய்து மும்பை, டெல்லி, குருகிராம் ஆகிய நகரங்களில் ஐந்து இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.

ரூ.2,435 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, யெஸ் வங்கி உள்பட 11 வங்கிகள் சார்பில், பாரத ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் கிராம்ப்டன் கிரீவ்ஸ் முன்னாள் தலைவர் கவுதம் தாபர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2015 முதல் 2019 வரையில் வங்கியில் பெற்ற பணத்தை, போலி நிறுவனங்கள் பெயரில் பணப் பரிவர்த்தனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கவுதம் தாபர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்று மும்பை, டெல்லி, குருகிராம் ஆகிய நகரங்களில் ஐந்து இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியுள்ளது.

ஏற்கெனவே யெஸ் வங்கியில் ரூ.466 கோடி முறைகேடு தொடர்பாக கவுதம் தாபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *