செய்திகள்

ரூ.222 கோடி பணத்துடன் உக்ரைன் முன்னாள் எம்.பி. மனைவி எல்லையில் கைது

கீவ், மார்ச் 21–

உக்ரைனில் கடுமையான போர் சூழலை பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்த முன்னாள் எம்.பி.யின் மனைவி தடுத்து நிறுத்தப்பட்டார். உக்ரைனில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இதனை பயன்படுத்தி அந்நாட்டின் முன்னாள் எம்.பி.யின் மனைவி எல்லை வழியே ஹங்கேரி நாட்டுக்கு கோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்து உள்ளார்.

எனினும், சந்தேகத்தில் அவரை தடுத்து நிறுத்திய எல்லை காவல் படையினர் சோதனை செய்ததில் இது தெரிய வந்துள்ளது. உக்ரைன் நாடாளுமன்ற எம்.பி.யான கொத்வித்ஸ்கியின் மனைவி, போர் சூழலை பயன்படுத்தி கொண்டு, வேறு நாட்டுக்கு தப்பி செல்லும் நோக்குடன் சூட்கேஸ்களில் முடிந்தவரை பணத்தை நிரப்பியுள்ளார்.

இதன் பின்பு, மக்களுடன் மக்களாக ஜக்கர் பாட்டியா மாகாணத்திற்கு வந்து உக்ரைன் எல்லை வழியே ஹங்கேரி நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். அவரிடம் இருந்த சூட்கேஸ்களில் 28 மில்லியன் டாலர் (ரூ.212.9 கோடி) மற்றும் 1.3 மில்லியன் யூரோ (ரூ.10.91 கோடி) மதிப்பிலான பணம் இருந்துள்ளது.

எனினும், எல்லை பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த உக்ரைன் காவல் படை வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டு உள்ளனர். இதில், சூட்கேஸ்களில் இருந்த பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து, எம்.பி. மனைவியிடம் விசாரணையும் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.