செய்திகள்

ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு விற்பனை: குமரகுரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Spread the love

உளுந்தூர்பேட்டையில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்பு விற்பனை:

குமரகுரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

 

விழுப்புரம்,ஏப்.10-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை பயன்படுத்தி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க உளுந்தூர்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்களில் வீடு வீடாக சென்று ரூ.100-க்கு காய்கறிகள் தொகுப்பு விற்பனை செய்யும் திட்டத்தை குமரகுரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அப்போது உளுந்தூர்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரை, வீடு கட்டும் சங்க தலைவர் மணிராஜ், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாய்ராம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், சீனுவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *