வர்த்தகம்

ரூ.1.15 லட்சத்தில் டி.வி.எஸ். ஐகியூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

தலைமை அதிகாரி கே. என். ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, ஜூன். 20–

டி.வி.எஸ். மோட்டார்ஸ் மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

டி.வி.எஸ். குழுமத்தின் கீழ் இயங்கும் டி.வி.எஸ். மோட்டார்ஸ், பெட்ரோல் விலை உயர்வு போன்ற பல காரணங்களால் வாகனங்கள் வாங்க சிரமப்படும் மக்களுக்கு உதவும் வகையில் மின்சாரம் மூலம் பேட்டரியில் ஓடும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை வீட்டிலேயே எளிய முறையில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த வாகனத்தால் கரும்புகை ஏற்படாது. மேலும் இந்த வாகனம் எந்த விதமான சத்தத்தையும் ஏற்படுத்தாது.

டெல்லி, பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், தற்போது சென்னையில் டி.வி.எஸ். ஐகியூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படுகிறது என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே. என். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த ஸ்கூட்டரை டி.வி.எஸ். வலைத்தளத்தில் ரூ.5000 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஸ்கூட்டர் வாங்க டி.வி.எஸ். கிரெடிட் நிறுவனம் சார்பில் தவணை கடன் வசதியையும் செய்யப்பட்டுள்ளது.

அதிக சக்தி வாய்ந்த 4.4 கிலோ வாட் எலக்ட்ரிக் மோட்டாருடன் இது அதிகபட்சமாக மணிக்கு 78 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். ஒரு தடவை சார்ஜ் செய்தாலே 75 கிலோமீட்டர் தூரம் செல்லலாம்.

டி.வி.எஸ். ஸ்மார்ட் கனெக்ட் என்னும் தொழில்நுட்பத்தால் அமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரில் டி.வி.எஸ். ஐகியூப் செயலி வசதியும் உள்ளது. இதன்மூலம் வாகனம் தூரத்தில் இருந்தாலும் ரிமோட் முறையில் வாகனத்தின் சார்ஜை கண்டரியலாம்.

இதில் வழிகாட்டும் திறன், வாகனத்தை எங்கு நிறுத்தி வைத்துள்ளோம் என்பதை கண்டறியும் வசதி போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

செல்லும் வேகத்திற்கு ஏற்ப தேவையான மின்சார பயன்பாட்டு அளவை தேர்வு செய்யும் வசதியும், சடன் பிரேக் வசதியும் உள்ளது. அதிர்வு மற்றும் சத்தம் ஏற்படுத்தாத வண்ணம் வடிவமைக்கப்பட்டஇந்த வாகனத்தில் ப்ளூடூத் இணைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஸ்கூட்டரின் சார்ஜிங் அளவை நம்மால் வீட்டிலிருந்தே கவனிக்க முடியும்.

இம்மாதிரி மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் சென்னையில் 6 முக்கிய பொது இடங்களில் சார்ஜிங் வசதியை டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவியுள்ளது. மேலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த நவீன மின்சார ஸ்கூட்டரை www.tvsmotors.com எள்ற இணையத்தளத்தில் வாங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *