ஆர். முத்துக்குமார்
பங்கு மார்க்கெட்டில் முதல் படியை எடுத்து வைப்பவர்கள் காணும் கனவு லட்சாதிபதியாகுவதே! ஆனால் இந்திய பங்குச் சந்தையில் எம்ஆர்எப் [MRF] டயர்கள் தயாரிப்பு நிறுவனம் வரலாற்று சிறப்பு கொண்ட சாதனை வளர்ச்சியை 15 நாட்களுக்கு முன்பு செய்து காட்டியுள்ளது.
முதல் முறையாக நமது பங்குச் சந்தை வரலாற்றில் எம்ஆர்எப் ஒரு பங்கின் விலை ரூ.1 லட்சத்தையும் தாண்டி விட்டது! மதராஸ் ரப்பர் ஃபேக்டரி, எம்ஆர்எப் சென்னையை தலைமை இடமாகக் கொண்ட நிறுவனமாகும் . அதன் பங்குகளின் விலை பல வருடங்களாகவே ரூ.50,000க்கும் மேல் இருந்து வந்தது. கொரோனா ஊரடங்கு விலகத் துவங்கிய கட்டத்தில் வாகன தயாரிப்புகள் தான் உடனே சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது. அக்கட்டத்தில் எம்ஆர்எப் பங்குகளின் விலை ரூ.75,000 யும் தாண்டியது.
இந்நிலையில் ஜூலை 14 ந் தேதி இந்திய பங்குச் சந்தையில் முதன் முறையாக ரூ.1 லட்சத்தை எம்ஆர்எப் நிறுவன பங்குகள் தாண்டியது.
ஆனால் ஜூன் 21 அன்று தான் எம்ஆர்எப் பங்குகளின் விலை ரூ.1,00,429 என்ற உச்சத்தில் அந்த நாளில் பெரும் பகுதியில் வர்த்தகமானது. ‘என்றுமே சோர்வடையாத டயர்கள்’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட எம்ஆர்எப் நிறுவனம் சோர்வடையாது ரூ.1 லட்சத்தை தொட்ட பிறகும் அதன் வளர்ச்சிகள் தொடருமா? நமது பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் , டிசிஎஸ், டாடா குழுமங்களால் செய்ய முடியாத சாதனையை எம்ஆர்எப் செய்து சாதித்தது எப்படி?
எல்லாப் பெரிய முதலீட்டு நிறுவனங்களும் தங்களது பங்குகளின் விலை குறிப்பிட்ட இலக்கை தாண்டியவுடன் அதைக் குறைந்த விலை பங்குகளாக பிரித்து விடுவார்கள். அதாவது ரூ.2000 விலை கொண்ட பங்கிற்கு ரூ.200 ஆக குறைந்து விடலாம். அதாவது ரூ.10 ஆகவே மீண்டும் குறைத்து அந்த அளவிற்கு கையிருப்பு பங்குகளாக அறிவிப்பார்கள்.
இதனால் ரூ.10 தானே மீண்டும் முதலீடு செய்யலாமே? என்று புது முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய முன் வருவார்கள் அல்லவா?
இப்படி ‘ பங்கு பிரிப்பு’ ரிலையன்ஸ் 2000ஆம் ஆண்டில் அறிவித்தது பிறகு 2009ளும் 2017 களிலும் ஒன்றுக்கு ஒரு இலவச பங்கு என தாராளமாக பங்குகளை வழங்கி கையிருப்பை இரட்டிப்புப் பங்குகளாக மாற்றினர்.
பங்குகளின் விலை குறைவாக இருந்தும் 2 முறை இரட்டிப்பு கையிருப்பை வைத்திருப்பதால் பங்கு முகப்பு விலை ரூ.10 ஆனால் சந்தை விலையோ ரூ.2495 ஆனது. ஆனால் எம்ஆர்எப் பங்கு பிரிப்பையோ, போனசாக பங்குகளையோ தந்ததே இல்லை. ரூ.1 லட்சத்தை அந்நிறுவன பங்குகளின் விலை உயர்வால் அந்நிறுவன பங்குதாரர்களுக்கும் இயக்குனர்களுக்கும் எந்தப் பெரிய லாபமும் கிடையாது! அவர்களின் நன்மதிப்பை உணர்ந்து பங்குச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் இந்நிறுவனத்தின் சில பங்குகள் பிரீமியம் ரகத்தை சேர்ந்ததாகும்.
இந்நிறுவனத்தை துவக்கிய பெருமை 1947 ல் மாமன் மாப்பிள்ளை என்ற இளைஞர் ரப்பர் பலூன்கள் வணிகராக துவங்கிய அந்நிறுவனமே இன்று உலகெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் பலத்தரப்பட்ட வாகனங்களின் சக்கரங்களில் இருக்கும் ரப்பர் டயர்களை வடிவமைத்து தயாரித்து விற்கிறார்கள்.
எம்ஆர்எப்பின் தயாரிப்பு ஆலைகள் தமிழகத்தில் 4 இடங்களிலும் புதுவை, கோட்டயம், கோவா மற்றும் தெலுங்கானாவிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
1960 முதலே பல்வேறு ரக டயர்கள் தயாரித்து வரும் எம்ஆர்எப், 1990ல் ரேடியல் டயர்கள் தயாரிப்பையும் துவங்கியது.
நமது நாட்டின் தேவையில் 80% தமிழகத்தில் இருந்து தான் எம்ஆர்எப் தயாரித்து அவற்றை விற்பனை செய்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வளர்ச்சியில் நேரடியாக உதவிய பெருமையும் எம்ஆர்எப் நிறுவனத்துக்கு உண்டு. அவர்கள் துவக்கிய எம்ஆர்எப் வேகப் பந்து வீச்சாளர் பயிற்சி மையம் உலக அணிகளில் இடம் பெற்றுள்ள பலரை உருவாக்கியது.
இந்திய அணியின் பல முன்னணி வேகப் பந்து வீச்சாளர்கள் அனைவரும் இம்மையத்தில் விசேஷ பயிற்சிகள் பெற்றவர்கள் ஆவர்.
சச்சின், கோலி போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இம்மையத்தில் பலத்தரப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களின் வேகப் பந்தை சமாளித்து திறம்பட விளையாடவும் இந்திய அணிக்கு வழி பெற வைத்தது.
அது மட்டும் இன்றி சச்சின், தற்சமயம் தோனி, கோலி உட்பட எல்லா நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக சம்பளம் தந்து விளம்பர தூதர்களாக வைத்தும் இருக்கிறார்கள்.
ஆக டயர் துறையிலும் கிரிக்கெட் சாதனையிலும் இந்தியாவை சர்வதேச அளவில் தலையாய நிலையில் உயர்த்தி வைத்து வரும் எம்ஆர்எப்பை பாராட்டியே ஆக வேண்டும்.
இந்தச் சாதனைகள் செய்வதால் ஒரு பங்கின் விலை ரூ.1 லட்சம் என உயருமா? நிச்சயம் கிடையாது.
எம்ஆர்எப்–ன் முதலீட்டு மதிப்பு ரூ.43000 கோடியாகும். ரிலையன்ஸ், டிசிஎஸ் போன்ற ஜாம்பவான் நிறுவனங்களின் மதிப்பில் கால்வாசியையும் விட குறைவு தான்!
கடந்த 50 ஆண்டுகளாக பங்கு பிரிப்போ, போனஸ் பங்குகளோ வெளியிடாமல் இருந்ததால் அந்நிறுவன பங்கு ஈட்டுத்தொகை அதிகமாகவே இருக்கிறது. அதை வைத்துத் தான் பங்குச் சந்தையில் பிரீமிய விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
இப்படி ரூ. 1 லட்சம் பங்கை வாங்கினால்