திருவனந்தபுரம், ஜூன் 30–
ரூ.1 கோடி பரிசு வென்ற வடமாநில தொழிலாளி, திருவனந்தபுரம் போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள தம்பானூர் காவல் நிலையத்திற்கு வட மாநில தொழிலாளர்கள் நேற்று கும்பலாக வருகை தந்தனர். இதைப் பார்த்து போலீஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், போலீசாரை பார்த்த தொழிலாளர்கள், அவர்களை அணுகி அவர்களின் காலில் விழுந்து அலறினர். போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுததை பார்த்த போலீசார் வியப்படைந்தனர். மேலும் அவர்களுக்கு ஆறுதல் கூறிய போலீசார் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் கையில் லாட்டரி சீட்டுடன் முன் வந்தார். லாட்டரியில் ரூ.1 கோடி வென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
பாதுகாப்பு அளியுங்கள்
பரிசு விழுந்தால் மகிழ்ச்சியாக இருங்கள். அதை நினைத்து அழுவது ஏன்? என்று போலீசார் கேட்டபோது, பரிசு விழுந்தது தெரிந்ததும், நண்பர்கள் சிலர் உயிருக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சினர். எனவே பரிசுத் தொகையை வாங்கிக் கொண்டு எங்கள் ஊர் அடையும் வரை என்னைப் பாதுகாக்க வேண்டும், என்றார்.
இதை கேட்ட போலீசார், வடமாநில தொழிலாளிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தனர். வெற்றி பெற்ற டிக்கெட்டை வங்கியில் டெபாசிட் செய்வது உள்ளிட்ட வழிமுறைகளையும் கூறினர். அதன்பின், பரிசுச் சீட்டைக் கொண்டு வடமாநில தொழிலாளி மற்றும் போலீசார் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.