செய்திகள்

ரூ.1 கோடியில் 227 பேருக்கு திருமண நிதி உதவி; 484 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள்

ஈரோடு, பிப். 8–

ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கத்துடன் திருமண நிதியுதவிகளும் 484 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும் ஈரோட்டில் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கேஎம்எஸ் திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் 227 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கத்துடன் திருமண நிதியுதவிகளையும், 484 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினர்.

அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:–

ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில், கோபிசெட்டிபாளையம் மற்றும் தூக்கநாயக்கன் பாளையம் வட்டத்தைச் சேர்ந்த 227 மகளிருக்கு ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கத்துடன் திருமண நிதியுதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் 484 பயனாளிகளுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தலைவர் கே.கே.காளியப்பன், வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *