
ரூபாய் 150 கட்டணத்தில் (அதிகபட்சம்) அழகு மலேசியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களை, திரையரங்கில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கண்டு வந்திருக்கும் பரம திருப்தியில்
Ace. (கரண் ராவத்தின் கேமரா உபயம்)
விஜய் சேதுபதி நாயகன். யோகி பாபு இணை நாயகன்( காமெடியன் என்று சொல்லக்கூடாது. விஜய் சேதுபதி நின்றால்… எழுந்தால்… நடந்தால்… படுத்தால்… ஓடினால்… அவரின்… நிழலாகவே விழுகிறாரே, அப்புறம்?!)
காதலி ருக்மணி வசந்தியின் பணப் பிரச்சினையையும்-
முன்பின் அறியா யோகி பாபுவின் காதலியின் பணப் பிரச்சினையையும் தீர்க்க சூதாட்ட விடுதிக்குள் நுழைந்து, சூதாடி, வில்லனின்( அவினாஷ்)
மாய வலையில் சிக்கும் நாயகன்-
மாய வலை அறுத்து,
இரு நாயகிகளின் பணப் பிரச்சனையை முடித்து… சொந்த ஊருக்கே திரும்பும் திரைக்கதை Ace.
நடுவில் மாயவலை பின்னிய வில்லனின் பிடியிலிருந்து விடுபட, பிரதான வங்கியை தனி ஆளாய் இருந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு அதில் வெற்றி பெறும் நாயகன்… கொள்ளையடித்த பணத்தை மீட்க துரத்தும் போலீஸ், அதன் பிடியிலிருந்து தப்பிக்க முயலும் நாயகன்…
இப்படியும் ஒரு கதை திரையில் துரத்துகிறது, இயக்குனர் ஆறுமுக குமாரின் கற்பனையில்.
” எமோஷன் நம்ம கையில எப்பவுமே கிடையாது…” என்று தன்னிலை விளக்கம் கூறும் விஜய் சேதுபதி, எமோஷன் இல்லாமலேயே இயல்பாய்… இரண்டே கால் மணி நேரத்தையும் ஓட்டி விடுகிறார்.
“காமக் களியாட்ட” போலீஸ் அதிகாரி பப்லு, நீண்ட இடைவெளிக்குப்பின்.
ஜஸ்டின் பிரபாகர் இசை. பாடல்கள்………?! சாம் சி எஸ் பின்னணி இசை, காட்சிகளின் வேகத்திற்கு பக்க பலம்.
மலேசியாவில் பரபரப்பான சாலைகளில்…, வங்கியை கொள்ளை அடித்து விட்டு விஜய் சேதுபதி மோட்டார் சைக்கிளில் பறக்கும் காட்சிகளில்… சூதாட்ட விடுதியில் வில்லன் அவினாஷ் ஆட்களோடு விஜய் சேதுபதி மோதும் காட்சிகளில்- அனல் பறக்கும் ஸ்டண்ட். பாராட்டுக்குரிய கலைஞர்கள்: ஒளிப்பதிவாளர் கரண் ராவத், ஸ்டண்ட் இயக்குனர்கள் தினேஷ் சுப்பராயன், டான் அசோக், ரிக்கி, ஜேம்ஸ் சங்.
ACE:
விஜய் சேதுபதி
ரசிகர்களுக்கு
A-ction
C-ommercial
E-ntertainment
அதிரடி ஆக்ஷன், வர்த்தக ரீதியிலான பொழுதுபோக்கு!