செய்திகள்

ரீசார்ஜ் செய்ய பெற்றோர் மறுத்தால் இளைஞர் தற்கொலை

போபால், மே 25–

ரீசார்ஜ் செய்ய பெற்றோர் மறுத்தால் 20 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் தற்போது மொபைல் போன் மூலம்தான் உலக நடப்பை அறிந்து கொள்கின்றனர். மேலும் பெரிய பொழுதுபோக்கு கருவியாகவும் மொபைல் போன் மாறிவிட்டது. அதே வேளையில் இளம் வயதில் தவறான வழியில் செல்வதற்கு மொபைல் போன்கள் காரணமாக உள்ளன. இதனையடுத்து பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதீதமாக கண்காணிப்பு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இணையதள இணைப்புக்காக தன் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று போபாலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் பெற்றோரிடம் கேட்க அவர்கள் மறுத்துள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போபால் காவல்துறை அதிகாரி எஸ்.ஷர்மா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *