செய்திகள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை வாங்குகிறது பேஸ்புக்

Spread the love

புதுடெல்லி , மார்ச். 26 –

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்க பேஸ்புக் வலைதள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த ஜியோவை தனி நிறுவனமாக மாற்றி அதன் கீழ் அனைத்து விதமான டிஜிட்டல் வணிகத்தையும் கொண்டுவர நிறுவனர் முகேஷ் அம்பானி திட்ட மிட்டிருந்தார். மேலும் ஜியோ நிறுவனத்தை 2020 மார்ச் 31க்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் முகேஷ் அம்பானி அறிவித்தார்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் நிறுவனத்தின் மதிப்பு 60 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்க பேஸ்புக் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜியோ நிறுவனத்தின் கீழ் பல்வேறு செயலிகள் செயல்பட்டு வருகின்றன. அவை டிஜிட்டல் யுகத்தில் கணிசமான சந்தையையும் பிடித்துள்ளன. தற்போது பேஸ்புக் நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்வதன்மூலம் அதன் டிஜிட்டல் வணிகம் அடுத்தகட்டத்துக்கு நகரும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *