வர்த்தகம்

ரியல் எஸ்டேட் சாதனையாளர் பட்டியல் வெளியீடு

சென்னை, ஜூலை.3–

இந்திய ரியல்‌ எஸ்டேட்‌ துறையின் வளர்ச்சி, அதன் நிறுவனங்கள் பற்றி ‘ஆசியா ஒன்‌’ மீடியா ஆய்வு நடத்தியது. அதில்‌, நாட்டின்‌ முக்கியமான 50 ரியல்‌ எஸ்டேட்‌ நிறுவனங்களும், அவற்றில் பொருளாதாரத்துக்கும்‌ மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும்‌ பங்களிப்போரையும்‌ இந்த ஆய்வு கண்டரிந்துள்ளது.

2021ஆம்‌ ஆண்டுக்கான சொத்து மதிப்பின்‌ அடிப்படையில்‌ முன்னணி 50 ரியல்‌ எஸ்டேட்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ தலைவர்களை, பல்வேறு மதிப்பீடுகளின்‌ அடிப்படையில்‌ இந்த ஆய்வு பட்டியலிட்டுள்ளது. இப்பட்டியல்‌, தேசிய அளவிலானது, மாநில அளவிலானது என்று இருபெரும்‌ பிரிவுகளாகப்‌ பிரிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின்‌ டெட்ராய்டு’ என்று அழைக்கப்படும்‌ நிறுவனம் சென்னையின்‌ ரியல்‌ எஸ்டேட்‌ துறையில்‌ முதல்‌ இரு இடங்களைப்‌ பெற்றுள்ளது. அல்லயன்ஸ்‌ மற்றும்‌ அர்பன்‌ ரைஸ்‌ தலைவர்களான மனோஜ்‌ நம்பூரு மற்றும்‌ சுனில்‌ பொம்மி ரெட்டி ஆகிய இளைஞர்கள்‌ சிறந்த தலைவர்களாக கோலோச்சுகின்றனர்‌. முறையே ரூ.2,175 கோடி மற்றும்‌ ரூ.2,150 கோடி சொத்துக்களைக்‌ கொண்டிருக்கும்‌ இவ்விருவரும்‌ ஐதராபாதின்‌ டாப்‌ 6 ரியல்‌ எஸ்டேட்‌ சாதனையாளர்‌ பட்டியலிலும்‌ இடம்‌ பிடித்திருக்கின்றனர்‌.

சென்னை ரியல்‌ எஸ்டேட்‌ துறையின்‌ காசா கிராண்ட்‌ பில்டர்‌ நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் எம்.என். , பாஷ்யம்‌ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்‌ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் யுவராஜன்‌, ரேடியன்ஸ்‌ ரியாலிட்டி டெவலப்பர்ஸ்‌ இயக்குநர்‌ யுவராஜன் ராதாகிருஷ்ணன்‌, ஸீப்ராஸ்‌ சி.சுப்பா ரெட்டி ஆகியோர் இந்த பட்டியளில் முன்னணியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *