செய்திகள்

‘ரியல்மீ’ 2 செல்போன் அறிமுகம்

* நீடித்த பேட்டரி * ஆயுள் * நவீன கேமரா

‘ரியல்மீ’ 2 செல்போன் அறிமுகம்

சென்னை, ஜூன் 29–

‘ரியல்மீ’ என்னும் செல்போன் நிறுவனம் ‘ரியல்மீ’ 2 நவீன ‘4 ஜி’ மொபைல்களை அறிமுகம் செய்து உள்ளது. இந்த எக்ஸ் 3, எக்ஸ் 3 சூப்பர் ஜூம் செல்போன்களில் 8ஜிபி நினைவாற்றல் மற்றும் 128 ஜிபி கொண்ட மொபைல் விலை ரூ.28 ஆயிரம். 12 ஜிபி மற்றும் 256 நினைவாற்றல் கொண்ட செல் விலை ரூ. 33 ஆயிரம். இந்த இரு ‘ரியல்மீ’ செல்போன்களில் டெலி போட்டோ லென்ஸ் இருக்கிறது.

ரியல் மீ பட்ஸ் க்யூ என்பது 20 மணி நேர அதிக பேட்டரி ஆயுள் கொண்டது. குறைந்த சக்தியில் வீடியோ கேம் விளையாட உதவுகிறது. இதன் விலை ரூ.2000 ஆகும். புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்றது. இந்த போன் கேமராக்கள். இந்த எக்ஸ் 3 ரக செல்போன்களில் டெலி போட்டோ ஜூம் லென்ஸ் உள்ளது. இரவு நேரத்திலும் பிரகாசமான படம் எடுக்கும் வசதி உள்ளது.

இது பிளிப்கார்டிலும், realme.com வலைதளத்திலும், செல்போன் விற்பனை ஷோரூம்களிலும் ஜூன் 30–ந் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *