திருப்பூர், ஜூலை 8-
திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் அவரது மாமனார் ஈஸ்வரமூர்த்தியின் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா திருமனமான 78 நாட்களில் தனது கணவர்வீட்டார் வரதட்சனை கேட்டு தன்னை கொடுமைபடுத்தியதாக கூறி தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டுமொத்த மாநிலத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ரிதன்யாவின் கணவர், கணவரின் தந்தை, தலைமறைவாக இருந்த கணவரின் தாய் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். தற்பொழுது திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் அவரது மாமனார் ஈஸ்வரமூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நிராகரித்துள்ளது.
அடுத்த ஜாமீன் தொடர்பான விசாரணை ஜூலை 15 அன்று நடைபெற உள்ளது.
![]()





