சென்னை, ஆக. 2 –
அடுத்த தலைமுறையினரை மேம்படுத்தும் நோக்கில் எத்திராஜ் கல்லூரியில் ரிசாயா அகாமியுடன் சேர்ந்து புதிய ட்ரோன் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தொழில்நுட்பத்தில் விவசாயம், ராணுவம், மருத்துவம் ஆகியத்துறைகளில் பயன்பாடுகள் பற்றிய பட்டயப் படிப்புகள் எத்திராஜ் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், கல்விச் சலுகைகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைக்கப்பட்டுள்ளது, சாதனங்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
இந்தப் படிப்பினை ரிசாயா அகாடமியின் முதன்மை அதிகாரி ரத்தீஸ், இஒய் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் அஸ்வின் ரவீந்திரநாத், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவர் ரமேஷ் வெங்கட், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலைவர் முரளிதரன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஏற்கனவே பட்டையப்படிப்பினை முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடந்து ட்ரோன் செய்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.